இதயத்துக்குள்ளும் ஒரு மூளையா...? மருத்துவ உலகை வியப்பில் ஆழ்த்திய அமெரிக்க விஞ்ஞானிகளின் அதிரடி கண்டுபிடிப்பு...!
Is there brain inside heart groundbreaking discovery by American scientists that amazed medical world
மனித இதயத்தில் இதுவரை அறியப்படாத வியப்பூட்டும் உண்மை ஒன்றை அமெரிக்க ஆய்வாளர்கள் வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளனர். இதயம் வெறும் ரத்தத்தைச் செலுத்தும் உறுப்பாக மட்டுமல்லாமல், தனித்துவமாகச் செயல்படும் 'குட்டி மூளை' போன்ற நரம்பு அமைப்பையும் தன்னகத்தே கொண்டிருப்பது மருத்துவ உலகில் புதிய கவனத்தை ஈர்த்துள்ளது.
இதயத்தின் உள்ளே செயல்படும் 'குட்டி மூளை'
மனித உடலின் ஒவ்வொரு உறுப்புக்கும் உயிரூட்டும் இதயம், மூளையின் கட்டளைகளையே முழுமையாகச் சார்ந்து இயங்குகிறது என்ற நீண்டகால நம்பிக்கைக்கு புதிய திருப்பத்தை இந்த ஆய்வு ஏற்படுத்தியுள்ளது.

இதயத்திற்குள் அமைந்துள்ள சிறப்பு நரம்பணுக்களின் தொகுப்பு, சுயமாக தகவல்களைப் பரிமாறிக்கொண்டு இதயத்தின் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்தும் திறன் கொண்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில், இதயத்தைச் சூழ்ந்துள்ள திசுக்களில் அமைந்துள்ள 'உள் இதய நரம்பு மண்டலம்' மிகவும் நுட்பமாக செயல்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதயத்தை காக்கும் இயற்கையான கட்டுப்பாட்டு மையம்
மூளையிலிருந்து ஒவ்வொரு கட்டளையும் வருவதற்காக காத்திருக்காமல், இந்த நரம்பணுக்கள் ஒன்றோடொன்று உடனுக்குடன் தகவல்களைப் பகிர்ந்து கொண்டு, இதயத் துடிப்பை சமநிலையுடன் வைத்திருக்க உதவுகின்றன. உடலியல் மாற்றங்கள் அல்லது மன அழுத்தம் போன்ற சூழ்நிலைகளிலும், இதயத்தின் இயல்பான செயல்பாட்டை பாதுகாக்கும் உள்ளூர் கட்டுப்பாட்டு மையமாக அவை செயல்படுகின்றன.குறிப்பாக, இதயத் துடிப்பு திடீரென அதிகரிக்கும் நேரங்களில், சில பிரத்யேக நரம்பணுக்கள் உடனடியாகச் செயல்பட்டு துடிப்பை கட்டுக்குள் கொண்டு வந்து, இதயத்தை இயல்பு நிலைக்கு மீட்டெடுக்க முக்கியப் பங்காற்றுகின்றன.
மருத்துவ உலகிற்கு புதிய நம்பிக்கை
மனித இதயத்திலும் இதேபோன்ற நரம்பு அமைப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால், சீரற்ற இதயத் துடிப்பு, இதய செயலிழப்பு உள்ளிட்ட பல்வேறு இதய நோய்களுக்கு புதுமையான சிகிச்சை முறைகளை உருவாக்குவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. இதய மருத்துவத் துறையில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கக்கூடிய முக்கிய அறிவியல் முன்னேற்றமாக இந்தக் கண்டுபிடிப்பு கருதப்படுகிறது.
English Summary
Is there brain inside heart groundbreaking discovery by American scientists that amazed medical world