கோவை சிறுமி படுகொலை வழக்கு...! கடத்தி, பாலியல் வன்கொடுமை செய்த 2 காமப்பேய்கள் அதிரடி கைது...! - Seithipunal
Seithipunal


கோவை மாவட்டம் சூலூர் அருகேயுள்ள ஒரு கிராமத்தில் பெற்றோருடன் வசித்து வந்த 10 வயது சிறுமி, கடந்த சில நாட்களுக்கு முன்பு மாலை நேரத்தில் அருகிலுள்ள கடைக்குச் சென்றார். ஆனால் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் பதற்றமடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதற்கிடையில், மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் சிறுமியை அழைத்துச் சென்றதாக தகவல் பரவியது.

இதையடுத்து, சிறுமியின் பெற்றோர் சூலூர் காவலர் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணையில் இறங்கினர். மேலும், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளும் ஆய்வு செய்யப்பட்டன.

இந்தநிலையில், சூலூர் அருகேயுள்ள கண்ணம்பாளையம் குளக்கரையோர முட்புதரில் சிறுமி ஒருவரின் உடல் கிடப்பதாக காவலர்களுக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக சம்பவ இடத்துக்குச் சென்ற காவலர்கள், சிறுமியின் உடலை மீட்டனர். பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், உடல் கண்டெடுக்கப்பட்டவர் காணாமல் போன அதே சிறுமி என்பது உறுதி செய்யப்பட்டது.

இந்தத் தகவல் அறிந்த மேற்கு மண்டல ஐ.ஜி. ரம்யாபாரதி, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் ரெட்டி மற்றும் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்துக்குச் சென்று நேரில் ஆய்வு மேற்கொண்டனர். மோப்ப நாயும் வரவழைக்கப்பட்ட நிலையில், அது சம்பவ இடத்திலிருந்து சிறிது தூரம் ஓடியபோதிலும், எவரையும் அடையாளம் காணவில்லை.

இதைத் தொடர்ந்து காவலர்கள் நடத்திய விசாரணையில், சிறுமியை 2 பேர் கடத்திச் சென்று கொலை செய்து, பின்னர் உடலை முட்புதரில் வீசியதாக தெரிவிக்கப்படுகிறது. சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக சிங்காநல்லூர் இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதற்கிடையில், சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு பின்னர் கொலை செய்யப்பட்டதாக தகவல் பரவியதால், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் அதிருப்தியில் ஆழ்ந்தனர். சிங்காநல்லூர் இ.எஸ்.ஐ. மருத்துவமனை முன்பாக திரண்ட அவர்கள் கண்டன முழக்கங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த சிங்காநல்லூர் மற்றும் சூலூர் காவலர்கள் சம்பவ இடத்துக்குச் சென்று போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். குற்றத்தில் தொடர்புடையவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், சிறுமி கொலை வழக்கில் கார்த்திக் என்பவரை காவலர்கள் கைது செய்தனர். தொடர்ந்து அவரது நண்பர் மோகன் ராஜையும் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். கொல்லப்பட்ட சிறுமியின் எதிர்வீட்டில் வசித்து வந்த கார்த்திக், விசாரணையின் போது குற்றத்தை ஒப்புக்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

சிறுமியை தோட்டப்பகுதிக்குக் கொண்டு சென்று வன்கொடுமை செய்து கொலை செய்ததாக அவர் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.கார்த்திக் அளித்த தகவலின் அடிப்படையில் மோகன் ராஜ் கைது செய்யப்பட்டு அவரிடமும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவத்தையடுத்து சூலூர் காவலர் நிலையம் முன்பாக பெருமளவில் காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

சிறுமியின் உறவினர்கள் மீண்டும் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபடக்கூடும் என்பதால், முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.சிறுமி கொலை வழக்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Coimbatore girl murder case 2 persons arrested kidnapping and harassment her


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->