தமிழக அரசியல் களத்தில் திராவிட இயக்கத்தை உருவாக்கிய அறிஞர் அண்ணா பிறந்த தினம் இன்று.!!
cn annadurai birthday 2021
சி.என்.அண்ணாதுரை :
தமிழக அரசியல் களத்தில் திராவிட இயக்கத்தை உருவாக்கிய 'அறிஞர் அண்ணா' 1909ஆம் ஆண்டு செப்டம்பர் 15ஆம் தேதி காஞ்சிபுரத்தில் பிறந்தார்.
இவர் பெரியாரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு திராவிடர் கழகத்தில் சேர்ந்தார். பிறகு தி.க.வில் இருந்து விலகி 1949ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆரம்பித்தார்.

இவர் மாநிலங்களவை உறுப்பினராக 1962ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1967ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை தேர்தலில் இவரது திராவிட முன்னேற்றக் கழகம் மகத்தான வெற்றி பெற்றதையடுத்து தமிழக முதல்வரானார். இவரே மதராஸ் மாநிலம் என்ற பெயரை தமிழ்நாடு என மாற்றினார்.
அரசியல் களத்தில் புதிய வரலாறு படைத்த சி.என்.அண்ணாதுரை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு 1969ஆம் ஆண்டு மறைந்தார். இவரது இறுதிச் சடங்கில் சுமார் ஒன்றரை கோடி மக்கள் கலந்துகொண்டனர். இந்நிகழ்வு கின்னஸ் உலக சாதனைகள் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.
English Summary
cn annadurai birthday 2021