முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று திருச்சி பயணம்.. நலத்திட்டங்களை தொடங்கி வைக்கிறார்..!! - Seithipunal
Seithipunal


தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று திருச்சி மாவட்டத்திற்கு பயணம் மேற்கொள்கிறார். இன்று காலை 9:30 மணி அளவில் சென்னையிலிருந்து விமான மூலம் திருச்சி செல்லும் அவர் அங்கிருந்து கார் மூலம் அண்ணா விளையாட்டு அரங்கம் சென்று மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் உதவி, மணிமேகலை விருதுகள், மாநில அளவிலான வங்கியாளர் விருதுகள் வழங்கியும், முடிவுற்ற பல்வேறு திட்ட பணிகளை தொடங்கி வைக்கிறார்.

பிறகு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார். அதனைத் தொடர்ந்து மொண்டிப்பட்டியில் அமைந்துள்ள தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் 2வது அலகு அமைந்துள்ள ஆலையின் விரிவாக்கத்திற்கான முதற்கட்ட வன்மரக்கூழ் ஆலை மற்றும் மணப்பாறை சிப்காட் தொழில் பூங்கா மற்றும் நிர்வாக அலுவலகத்தை திறந்து வைக்கிறார். இதனைத் தொடர்ந்து அண்ணா ஸ்டேடியம் மற்றும் விமான நிலையப் பகுதிகளில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் முதல்வர் மு.க ஸ்டாலின் மீண்டும் திருச்சியில் இருந்து விமான மூலம் சென்னை திரும்புகிறார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

CM Stalin visits trichy to inaugurate various welfare schemes


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->