கொலைக்கு எடப்பாடி பழனிசாமி தான் காரணம்! ஸ்டாலின் பகீர்! ஸ்தம்பித்த சட்டமன்றம்!   - Seithipunal
Seithipunal


தமிழக சட்டப்பேரவையில், ஜெகன் கொலையில் சம்மந்தப்பட்டவர் அவதானப்பட்டி அதிமுக கிளைச்செயலாளர் என்பது தெரிய வந்துள்ளது. இதுவே இதன் பின்னணியில் எடப்பாடி பழனிசாமிக்கும் தொடர்ப்பு உள்ளது என்று முதல்வர் ஸ்டாலின் பேசியதற்கு அதிமுக உறுப்பினர்கள் கடும் கண்டனம் தெரிவித்து அமளியில் ஈடுப்பட்டனர். 

தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடரில் இன்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நிகழ்த்தப்பட்ட காதலர் கொலை சம்பவத்தை குறிப்பிட்டு, கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக தமிழக அரசு எடுத்த நடவடிக்கை என்ன? என்பது குறித்தும் கேள்வி எழுப்பினார். 

இதற்க்கு பதிலளித்து உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், "கல்லூரியில் 2ஆம் ஆண்டு படிக்கும் மாணவியை திருமணம் செய்த கிருஷ்ணகிரி கிட்டம்பட்டியை சேர்ந்த ஜெகன் கடந்த 21ம் தேதி கொலை செய்யப்பட்டார்.

கொலை தொடர்பாக பெண்ணின் தந்தையான அதிமுக கிளை செயலாளர் சங்கர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். சமூக நீதி காக்கும் மண்ணாக உள்ள தமிழ்நாட்டில், இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறாத வண்ணம், அரசியலுக்கு அப்பாற்பட்டு அனைவரும் ஒருங்கிணைந்து சமூக நல்லிணக்கத்தை பேணிக்காக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்" என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

அப்போது எதிர்க்கட்சி தலைவர் ஈபிஎஸ் உள்ளிட்ட அதிமுக உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். கொலைக்கு பின்னணியில் அதிமுக (எடப்பாடி பழனிசாமி) இருப்பது போன்று முதல்வர் ஸ்டாலின் பேசியதாக கூறி அதிமுக உறுப்பினர்கள் கடும் கண்டனம் தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CM Stalin Say Krushnagiri murder case ADMK Condemn


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->