தமிழகத்தின் வளர்ச்சியை உலக அரங்கில் உயர்த்திப்பிடித்த நம் சாதனை வீரர்களுக்கு வாழ்த்துக்கள்.! - Seithipunal
Seithipunal


மத்திய அரசு அறிவித்துள்ள விளையாட்டு வீரர்களுக்கான கேல் ரத்னா விருதில் உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற தமிழக வீரர் குகேஷின் பெயர் இடம்பெற்றுள்ளது. இதேபோல், அர்ஜுனா விருதுக்கான பட்டியலில் துளசி மதி, மனிஷா, நித்யஸ்ரீ உள்ளிட்ட மூன்று தமிழக வீராங்கனைகள் இடம் பெற்றுள்ளனர்.

இந்த நிலையில், கேல் ரத்னா விருது, அர்ஜுனா விருதுகளை பெற்ற தமிழக வீரர்- வீராங்கனைகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:-

"தமிழக விளையாட்டுத் துறையின் வளர்ச்சியை உலக அரங்கில் உயர்த்திப் பிடித்த நம் சாதனை வீரர்களுக்கு மத்திய அரசின் விருதுகள் வழங்கப்பட்டிருப்பதில் மகிழ்ச்சி அளிக்கிறது. கேல் ரத்னா விருது பெற்ற குகேஷ், அர்ஜுனா விருது பெற்ற துளசிமதி, நித்யஸ்ரீ, மனிஷா ராமதாஸ் ஆகியோருக்கு என் வாழ்த்துகள். 

வெற்றிகள் தொடரட்டும்!. தமிழ்நாட்டில் இருந்து சாதனை படைப்போரின் எண்ணிக்கை வருங்காலங்களில் உயர்ந்துகொண்டே இருக்க வேண்டும்." என்று தெரிவித்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

cm mk stalin wishes to won central government award players


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->