பெரியாரும், அண்ணாவும் தமிழினத்துக்குத் தந்த நெருப்பு - முதல்வர் ஸ்டாலின் ட்வீட்.!!
cm mk stalin tweet about kalaingar memorial day
திராவிட முன்னேற்ற கழகத்தின் மூத்த தலைவரும், தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான கலைஞர் கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7-ந் தேதி காலமானார். இதையடுத்து ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் மாதம் 7-ந் தேதி கலைஞரின் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், இன்றைய தினம் கலைஞர் 7-ம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வுகள் தமிழ்நாட்டின் அனைத்து கிராமங்கள், நகரங்களில் இன்று காலை முதல் நடைபெற்று வருகின்றன.
தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் சென்னையில் கலைஞர் நினைவிடம் நோக்கி அமைதிப் பேரணி நடைபெற உள்ளது. இந்தப் பேரணியில் பெருந்திரளாக திமுகவினர் பங்கேற்கின்றனர்.
இந்த நிலையில், தி.மு.கவின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
தலைவர் கலைஞர் -
முத்துவேலரும் அஞ்சுகம் அம்மையாரும் பூமிக்குத் தந்த பிறப்பு!
தந்தை பெரியாரும் பேரறிஞர் அண்ணாவும் தமிழினத்துக்குத் தந்த நெருப்பு!
அவரது சாதனைகளால் சிறப்பு பெற்ற தமிழ்நாட்டைக் காத்திட – முன்னேற்றிட உறுதியேற்று, கலைஞரின் ஒளியில் "எல்லார்க்கும் எல்லாம்" – "எதிலும் தமிழ்நாடு முதலிடம்" எனும் இலக்கை நோக்கி வெற்றிப்பாதையில் நடைபோடுவோம்! என்று தெரிவித்துள்ளார்.
English Summary
cm mk stalin tweet about kalaingar memorial day