திருவாரூரில் கள ஆய்வு செய்யும் முதல்வர் மு.க ஸ்டாலின் - எப்போது தெரியுமா?
cm mk stalin going to tiruvarur
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வருகிற 9 மற்றும் 10-ந்தேதிகளில் திருவாரூர் மாவட்டத்தில் கள ஆய்வு மேற்கொண்டு பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
இதற்காக அவர் வருகிற 9-ந்தேதி காலை சென்னையில் இருந்து விமானம் மூலமாக புறப்பட்டு திருச்சி செல்கிறார். அங்கிருந்து சாலை மார்க்கமாக திருவாரூர் சென்று கலைஞர் கோட்டத்தில் ஓய்வெடுக்கிறார்.
மாலை அங்கிருந்து புறப்பட்டு காட்டூர் செல்லும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவருடைய பாட்டி அஞ்சுகம் நினைவகத்தில் மலர்தூவி மரியாதை செலுத்திவிட்டு திருவாரூர் ரெயில் நிலையம் ரவுண்டானா அருகே அமைக்கப்பட்டுள்ள கருணாநிதி சிலையை திறந்து வைக்கிறார்.
அங்கு நடைபெறும் ரோடு ஷோ நிகழ்ச்சியிலும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு மக்கள் மத்தியில் நடந்து சென்று அவர்களின் வரவேற்பை ஏற்றுக்கொள்கிறார்.
10-ந்தேதி காலை திருவாரூர் புதிய பேருந்து நிலையம் அருகே நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொண்டு ஆயிரக்கணக்கான பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.
இந்த நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு திருவாரூரில் இருந்து சாலை மார்க்கமாக திருச்சி விமான நிலையம் செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கிருந்து விமானம் மூலம் சென்னை திரும்புகிறார். திருவாரூர் செல்லும் முதலமைச்சருக்கு வழி நெடுகிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.
English Summary
cm mk stalin going to tiruvarur