திமுக மூத்த நிர்வாகி ஆர். சின்னசாமியின் மறைவு திமுகவிற்கு பேரிழப்பாகும் - முதல்வர் ஸ்டாலின்.! - Seithipunal
Seithipunal


தருமபுரி மாவட்ட திமுகவின் மூத்த தலைவர் ஆர். சின்னசாமி வயது மூப்பு காரணமாக இன்று காலமானார். அவரின் மறைவு தருமபுரி மாவட்ட திமுகவினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரின் மறைவுக்கு திமுகவினர் மட்டுமின்றி பல்வேறு கட்சித் தலைவர்களுக்கும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், ஆர். சின்னசாமி மறைவுக்கு தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:- “1971, 1984 மற்றும் 1989-ஆம் ஆண்டு தேர்தல்களில், தி.மு.க உறுப்பினராகத் தருமபுரி சட்டமன்றத் தொகுதியில் வென்றவரும், ஒருங்கிணைந்த தருமபுரி மாவட்டக் கழகத்தின் முன்னாள் செயலாளருமான திரு. ஆர். சின்னசாமி அவர்கள் மறைந்த செய்தியறிந்து மிகவும் வருத்தமடைந்தேன்.

அவர் மூன்று முறை தருமபுரி சட்டமன்ற உறுப்பினராக இருந்து அம்மாவட்டத்தின் வளர்ச்சிக்காக பெரும் பணிகளை ஆற்றியவர். மூத்த முன்னோடியாக, திராவிட முன்னேற்றக் கழகத்தின் முதுபெரும் உறுப்பினராக இருந்த, திரு. ஆர். சின்னசாமி அவர்களின் மறைவு கழகத்துக்கும் பேரிழப்பாகும். நமக்கு தருமபுரி மக்களுக்கும்வழிகாட்டிய அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், கழகத்தினருக்கும். பொதுமக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

cm mk stalin condoles to dmk formar excuetive r sinnasami death


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->