ரூ.2 லட்சம் பரிசு, ஒரு சவரன் தங்கப்பதக்கம் - முதலமைச்சர் கணினித் தமிழ் விருதுக்கு விண்ணப்பிப்பது எப்படி?! - Seithipunal
Seithipunal


"முதலமைச்சர் கணினித் தமிழ் விருது" 2021 மற்றும் 2022ஆம் ஆண்டுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதக்க அரசு தரப்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தகவல் தொழில் நுட்ப வளர்ச்சிக்கேற்ப, உலகமெலாம் கணினி வழித் தமிழ் மொழி பரவச் செய்யும் வகையில் கணினித் தமிழ் வளர்ச்சிக்காக சிறந்த தமிழ் மென்பொருள் உருவாக்குபவர்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழ் வளர்ச்சித் துறை வாயிலாக முதலமைச்சர் கணினித் தமிழ் விருது என்ற பெயரில் விருது வழங்கப்பட்டு வருகிறது. 

விருது பெறுபவருக்கு விருதுத் தொகையாக 2 லட்சம் ரூபாய் பரிசு மற்றும் ஒரு சவரன் தங்கப்பதக்கம் மற்றும் தகுதியுரை வழங்கப்படுகிறது.

கடந்த 2021ஆம் ஆண்டுக்குரிய முதலமைச்சர் கணினித் தமிழ் விருதுக்கு மென்பொருள்களுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு பரிசீலனையில் உள்ளது. 

மேலும் 2021ஆம் ஆண்டுக்கு கூடுதல் விண்ணப்பங்களும், 2022ஆம் ஆண்டுக்கு தனியார் மற்றும் நிறுவனத்திடமிருந்து, தமிழ் வளர்ச்சிக்கான மென்பொருள்கள் விண்ணப்பங்களும் வரவேற்கப்படுகின்றன. 

விருதுக்கு அனுப்பப்படவுள்ள மென்பொருள்கள் 2018, 2019, 2020, 2021 ஆம் ஆண்டுகளில் தயாரிக்கப்பட்டதாக இருத்தல் வேண்டும். இவ்விருதுக்குரிய விண்ணப்பம் மற்றும் விதிமுறைகளைத் தமிழ் வளர்ச்சித் துறையின் வலைத் தளத்தில் (www.tamilvalarchithurai.com) இலவசமாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விருதுக்கான விண்ணப்பம் தமிழ் வளர்ச்சி இயக்ககத்திற்கு 31.12.2022 தேதிக்குள் வந்து சேர வேண்டும். 

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி :
தமிழ் வளர்ச்சி இயக்குநர், 
தமிழ் வளர்ச்சி வளாகம் முதல் தளம், 
தமிழ்ச்சாலை, எழும்பூர், 
சென்னை - 600 008.

தொடர்புக்கான தொலைபேசி எண்கள் : 044 - 28190412, 044 - 28190413. 
மின்னஞ்சல் முகவரி tvt.budget@gmail.com.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

CM Computer Tamil Award 2021 2022


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->