CLAT தேர்வில் வெற்றிபெற்ற மலைவாழ் மாணவர் பரத்! முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!
CLAT exam Student bharath CM Stalin Wish
திருச்சி மாவட்டம் பச்சைமலை தோனூர் மலைக்கிராமத்தை சேர்ந்த மலைவாழ் மாணவர் பரத், பொது சட்ட நுழைவுத்தேர்வில் (CLAT) வெற்றி பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.
பச்சைமலை பகுதியில் CLAT தேர்வில் வெற்றி பெற்று, தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி பயில தகுதி பெறும் முதல் பழங்குடியின மாணவர் என்ற சாதனையை பரத் படைத்துள்ளார்.
"நம்ம மக்களுக்கு ஏதாவதுனா சட்டம்தான் முன்னாடி வரும். அதனால வக்கீலுக்கு படிக்க வச்சேன்.. முன்னாடி வந்துட்டான்" என மாணவரின் தந்தை அளித்த பேட்டி வைரலாகி வருகிறது.
இந்நிலையில், CLAT தேர்வில் முதலிடம் பிடித்த மாணவன் பரத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ள வாழ்த்து செய்தியில், "உள்ளம் உவகையில் நிறைகிறது. தம்பி பரத் சட்டம் பயின்று தன் அறிவொளியை இந்தச் சமூகத்துக்கு வழங்கிட வேண்டும் என வாழ்த்துகிறேன்.
அவரது சட்டப் படிப்புக்குத் தி.மு.க. சட்டத்துறை துணை நின்று அவரை வழிநடத்தும்" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
CLAT exam Student bharath CM Stalin Wish