இன்ஸ்டாகிராம் காதல்; 16 வயது சிறுமியை திருமண ஆசைகூறி கடத்தி, பாலியல் தொல்லை கொடுத்த சிவில் இன்ஜினியர் கைது..!
Civil engineer arrested for kidnapping girl he met on Instagram promising to marry her
இன்ஸ்டாகிராம் மூலம் 16 வயது சிறுமியிடம் பழகி, திருமணம் செய்வதாக கூறி, கடத்தி சென்ற சிவில் இன்ஜினியர் ஒருவர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை பரங்கிமலை பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி, சில தினங்களுக்கு முன்பு திடீரென மாயமாகியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், பல இடங்களில் மகளை தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து, பரங்கிமலை காவல் நிலையத்தில் மகளை காணவிலை என புகார் கொடுத்திருந்தனர்.
குறித்த புகாரின்பேரில், போலீசார் சிறுமியை தேடிவந்தள்ளனர். அப்போது இன்ஸ்டாகிராம் மூலம் கன்னியாகுமரி மாவட்டம் தோவா லையை சேர்ந்த சிவில் இன்ஜினியரிங் படித்தவரான திவேஷ் (19) என்பவரும், சிறுமியும் காதலித்து வந்தது தெரியவந்துள்ளது.
அவர் சிறுமியை, திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்ததும் தெரிய வந்துள்ளது. இதையடுத்து தோவாளை பகுதியில் கடத்தி வைத்திருந்த சிறுமியை போலீசார் மீட்டு சென்னைக்கு அழைத்து வந்து மகளிர் காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர்.
காதலன் திவேஷை பரங்கிமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். இதையடுத்து திவேஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகிகின்றனர்.
English Summary
Civil engineer arrested for kidnapping girl he met on Instagram promising to marry her