'விண்வெளியில் சீனா செய்த மர்ம வேலை'...! பூமியைச் சுற்றும் அந்த 'மர்மப் பொருள்' என்ன...? - உலக நாடுகள் அதிர்ச்சி - Seithipunal
Seithipunal


சீனாவின் விண்வெளி நடவடிக்கைகள் மீண்டும் உலக நாடுகளின் தீவிர கவனத்தை ஈர்த்துள்ளன. ‘ஷென்லாங்’ விண்கலத்தில் இருந்து பூமியின் சுற்றுவட்டப்பாதையில் மர்ம பொருள் ஒன்று வெளியேற்றப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல், சர்வதேச விண்வெளி ஆய்வு வட்டாரங்களில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் விண்வெளி ஆய்வு நிறுவனம், கடந்த பிப்ரவரி மாதம் ‘ஷென்லாங்’ என்ற மேம்பட்ட விண்கலத்தை விண்வெளிக்குச் செலுத்தியது. இந்த விண்கலத்தின் சிறப்பம்சம் என்னவெனில், பூமியின் சுற்றுவட்டப்பாதையில் நீண்டநேரம் சுழன்று ஆய்வுகளை மேற்கொண்ட பின்னர் பாதுகாப்பாக பூமிக்குத் திரும்பி தரையிறங்கும் திறன் கொண்டதாகும்.

இந்த நிலையில், பூமியை சுற்றிவரும் தனது பயணத்தின் போது ‘ஷென்லாங்’ விண்கலம் அடையாளம் காண முடியாத ஒரு மர்ம பொருளை விண்வெளியில் வெளியேற்றியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது அந்த மர்ம பொருள் பூமியின் சுற்றுவட்டப்பாதையில் தொடர்ந்து சுழன்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

வணிக விண்வெளி கண்காணிப்பு நிறுவனமான LeoLabs வெளியிட்ட தகவலின்படி, சீன விண்கலத்தில் இருந்து பிரிந்த இந்த பொருள் கடந்த 22-ஆம் தேதி கண்காணிப்பு அமைப்புகளால் பதிவுசெய்யப்பட்டது. இந்த மர்ம பொருளின் இயக்கம் மற்றும் செயல்பாடுகள் தற்போது தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், அமெரிக்காவின் பல்வேறு விண்வெளி ஆய்வு மையங்களும் இந்த பொருளின் நகர்வுகளை நெருக்கமாக கண்காணித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.விண்வெளியில் இத்தகைய மர்ம பொருட்களை சோதனை அடிப்படையில் இயக்குவது சீனாவுக்கு புதிதல்ல.

ஏற்கனவே 2024-ஆம் ஆண்டிலும் இதேபோன்ற மர்ம பொருள் ஒன்று சீனாவின் செயற்கைக்கோளில் இருந்து வெளியேற்றப்பட்டிருந்தது.இதுகுறித்து விண்வெளி ஆய்வாளர்கள் தெரிவிக்கையில், ஒரு செயற்கைக்கோள் அல்லது விண்கலத்தின் அருகே சிறிய ஆய்வு கருவிகளை இயக்கி தொழில்நுட்ப சோதனைகள் நடத்தும் முயற்சியாக இது இருக்கக்கூடும் என கருதப்படுகிறது.

இதேபோன்ற சோதனைகளை ரஷியாவும் கடந்த காலங்களில் மேற்கொண்டுள்ளது.ஆனால், இந்த நடவடிக்கை வெறும் அறிவியல் ஆய்வுக்காக மட்டும்தானா என்ற கேள்வி சர்வதேச அளவில் எழுந்துள்ளது.

அல்லது பிற நாடுகளின் செயற்கைக்கோள்களின் செயல்பாடுகளை கண்காணிக்கவோ, உளவு பார்க்கவோ, அவசரநிலையில் தாக்கி செயலிழக்கச் செய்யவோ இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறதா என்ற சந்தேகமும் வலுத்து வருகிறது.

இதனால், சீனாவின் இந்த மர்ம விண்வெளி நடவடிக்கை உலகளாவிய பாதுகாப்பு வட்டாரங்களில் புதிய அச்சத்தையும் தீவிர கண்காணிப்பையும் உருவாக்கியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

China mysterious work space What that mysterious object orbiting Earth world shocked


கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...



Advertisement

கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...


செய்திகள்



சினிமா

Seithipunal
--> -->