தமிழகத்தில் குழந்தை தொழிலாளர் எண்ணிக்கை 180 சதவீதமாக உயர்வு.!  - Seithipunal
Seithipunal


மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த ராஜா என்பவர் மதுரை உயர்நீதிமன்றத்தில் பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் அவர் தெரிவித்துள்ளதாவது,

"இந்தியாவில் கடந்த 2011 ஆண்டு எடுக்கபட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் 29 சதவீதம் பேரும், 14 முதல் 18 வயதுள்ள குழந்தைகள் 10 சதவீதம் பேரும் உள்ளனர். 

பொதுவாக குழந்தைகள் பள்ளிகள் மற்றும் விளையாட்டு மைதானங்களில் தான் இருக்க வேண்டும். ஆனால், வறுமை, பொருளாதார சூழ்நிலை, முறையில்லா வருமானம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் குழந்தைகள் வேலைக்கு சென்று வருகின்றனர். 

கடந்த 2021-ம் ஆண்டு சி.ஏ.சி.எல். என்ற அமைப்பு ஆய்வு ஒன்றை நடத்தியது. அந்த ஆய்வில், தமிழகத்தில் 180 சதவீதம் குழந்தை தொழிலாளர்கள் அதிகரித்துள்ளதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

அதிலும் குறிப்பாக விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலைகளில் ஏற்பட்ட தீ விபத்தில் குழந்தை தொழிலாளர்கள் இறந்ததாக ரூ.14 லட்சம் வரை அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது. 

இதையடுத்து, தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் இருந்து குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர். அதுமட்டுமல்லாமல், இந்தியாவில் கடந்த 2016-ம் ஆண்டு வரை 1 லட்சத்து 75 ஆயிரம் குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர். 

தமிழ்நாட்டில் ஒவ்வொரு இடத்திலிருந்தும் குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்படும்போது அவர்களுக்கு மத்திய, மாநில அரசு தரப்பில் இருந்து இழப்பீடு வழங்கப்படுகிறது. ஆனால் அந்த இழப்பீடு வருவதற்கு பெரும் தாமதம் உள்ளது.

இதைத்தொடர்ந்து கடந்தது இரண்டு வருடங்களாக கொரோனா தொற்றின் காரணமாக தமிழ்நாட்டில் குழந்தை தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. 

அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் தான் குழந்தை தொழிலாளர் முறை அதிகரித்து, பல்வேறு வழக்குகள் பதிவாகி வருகிறது.

எனவே, இந்த பகுதிகளில் சிறப்பு குழந்தைகள் மறுவாழ்வு மையத்தை அமைத்து அதன் படி, மீட்கப்படும் குழந்தை தொழிலாளர்களுக்கு உரிய பயிற்சி அளித்து இழப்பீடு தொகை விரைந்து கிடைக்க உத்தரவிட வேண்டும்" இஎன்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த மனு நீதிபதிகள் மகாதேவன் மற்றும் சத்தியநாராயண பிரசாத் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த மனு குறித்து நீதிபதிகள் தெரிவித்ததாவது,

"இந்தியாவில் மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் குழந்தை தொழிலாளர் முறைக்கு எதிராக பல்வேறு கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அத்துடன் மத்திய, மாநில அரசுககளும் குழந்தை தொழிலாளர் முறையை முற்றிலும் ஒழிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். 

இதில், தமிழ்நாட்டில் குழந்தை தொழிலாளர்கள் எண்ணிக்கை 180 சதவீதம் அதிகரித்துள்ளது என்பது வேதனை அளிக்கிறது. இந்த வழக்கு குறித்து மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல செயலர், மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறைச் செயலர், தமிழ்நாடு மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர் செயலர் உள்ளிட்டோர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு இந்த வழக்கு விசாரணையை நீதிபதிகள் வரும் 30-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

child labour count one eighty percentage increase in tamilnadu


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->