சாட்சி சொல்ல தடுப்பதற்கான கொலையா...? - டெல்லியில் ரச்சனா யாதவ் சுட்டுக் கொலை
Was murder prevent her from testifying Rachna Yadav shot dead Delhi
டெல்லி ஷாலிமார் பாக் பகுதியைச் சேர்ந்த ரச்சனா யாதவ் (44), அப்பகுதி நலச் சங்கத் தலைவராக செயல்பட்டு வந்தவர். கடந்த 2023ஆம் ஆண்டு, அவரது கணவர் விஜயேந்திர யாதவ், ரச்சனாவின் கண் முன்னாலேயே மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அந்த கொலை வழக்கில் ரச்சனாவே முக்கிய சாட்சியாக இருந்தார். இதுவரை அந்த வழக்கில் 5 பேர் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.இந்த நிலையில், நேற்று காலை ஷாலிமார் பாக் பகுதியில், ரச்சனா யாதவ் தனது வீட்டருகே உள்ள கடைக்குச் சென்றபோது, பைக்கில் வந்த இரு மர்ம நபர்கள் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தி, சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றனர்.
படுகாயமடைந்த ரச்சனாவை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.
கணவர் கொலை வழக்கில் சாட்சியம் அளிப்பதைத் தடுக்கும் நோக்கில், அதே வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளே இந்த கொலையை நிகழ்த்தியிருக்கலாம் என போலீசார் வலுவான சந்தேகம் தெரிவித்து வருகின்றனர்.
சம்பவம் நடந்த பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை போலீசார் கைப்பற்றியுள்ளனர். அதில், பைக்கில் வந்த இருவர் துப்பாக்கிச்சூடு நடத்தி தப்பியோடும் காட்சிகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, குற்றவாளிகளை பிடிக்க தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
English Summary
Was murder prevent her from testifying Rachna Yadav shot dead Delhi