நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: நிபந்தனையற்ற மன்னிப்பு கோரிய முன்னாள், இன்நாள் தலைமைச்செயலாளர்கள்: மகிழ்ச்சி இல்லை என வேதனை தெரிவித்த உயர்நீதிமன்றம்..!
Chief Secretaries issue unconditional apology in contempt of court case
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்பாக, முன்னாள் தலைமைச்செயலாளர் சிவதாஸ் மீனா மற்றும் தற்போதைய தலைமைச்செயலாளர் முருகானந்தம் ஆகிய இருவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் நேரில் ஆஜர் ஆகி மன்னிப்பு கோரியுள்ளனர்.
தமிழக அரசின் முன்னாள் தலைமைச்செயலாளர் சிவதாஸ் மீனா, தற்போதைய தலைமைச்செயலாளர் முருகானந்தம் மீது கருணை அடிப்படையில் வேலை வழங்காதது தொடர்பான உத்தரவை அமல்படுத்தாதது குறித்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை இன்று நடைபெற்ற நிலையில், சிவதாஸ் மீனா மற்றும் முருகானந்தம் ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி, நிபந்தனையற்ற மன்னிப்பு கோரி மனு தாக்கல் செய்தனர்.
-tlasp.png)
இந்த வழக்கு விசாரணையின் போது, குறித்த வழக்கை நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொண்டதில் மகிழ்ச்சி இல்லை என்றும் மாறாக தர்மசங்கடமான நிலை ஏற்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.
அத்துடன், சிவதாஸ் மீனா மற்றும் முருகானந்தம் ஆகியோரின் மன்னிப்பை ஏற்றுக் கொண்டு, நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்துள்ளது.
English Summary
Chief Secretaries issue unconditional apology in contempt of court case