முதல்வர் ஸ்டாலின் வெளிநாட்டு பயணம் நிறைவு! தமிழ்நாடு திருப்பும் முதல்வர் மு.க.ஸ்டாலின்!
Chief Minister Stalin foreign trip concludes Chief Minister MK Stalin returns to Tamil Nadu
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது வெளிநாட்டு பயணத்தை நிறைவு செய்து தாயகம் திரும்புவதாக தெரிவித்துள்ளார்.
ஜெர்மனியில் தொடங்கிய #TNRising பயணம், லண்டனில் தமிழர்கள் அளித்த உற்சாக வரவேற்புடன் நிறைவடைந்தது. இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில்,“ஜெர்மனியில் தமிழர்கள் அளித்த உற்சாக வரவேற்புடன் தொடங்கிய #TNRising பயணம், லண்டனில் அவர்கள் வாழ்த்தி வழியனுப்ப நிறைவுறுகிறது.
அளவில்லா அன்பு பொழிந்த உள்ளங்களின் எண்ணிலடங்கா நினைவுகளுடன் தாயகம் திரும்புகிறேன்.
இத்தனை நாளும் தங்கள் சகோதரனாய் என்னை கவனித்துக்கொண்ட #TamilDiaspora-விற்கு என் அன்பை நன்றியாய் நவில்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
முதல்வர் ஸ்டாலினின் இந்த வெளிநாட்டு பயணம் முதலீட்டு ஒப்பந்தங்கள், வர்த்தக பேச்சுவார்த்தைகள், வெளிநாட்டு தமிழர்களுடன் சந்திப்பு போன்ற பல்வேறு நிகழ்வுகளை உள்ளடக்கியதாகும்.
English Summary
Chief Minister Stalin foreign trip concludes Chief Minister MK Stalin returns to Tamil Nadu