12 நாட்கள் அமெரிக்கா புறப்படும் முதல்வர் - இதுதான் காரணமா? - Seithipunal
Seithipunal


முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்க்கும் விதமாக, இன்று விமானம் மூலம் சென்னையில் இருந்து அமெரிக்கா புறப்பட்டு செல்கிறார். அவரை அமைச்சர்கள் மற்றும் திமுக முக்கிய நிர்வாகிகள் முதல்வரை வழியனுப்ப உள்ளனர். 

இதையடுத்து மு.க ஸ்டாலின் நாளை சான்பிரான்சிஸ்கோவில் நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்கிறார். அந்த மாநாட்டில், தொழில் தொடங்க தமிழகம் வருமாறு முதலீட்டாளர்களுக்கு அவர் அழைப்பு விடுப்பதுடன், முக்கிய முதலீடுகளுக்கான ஒப்பந்தங்களும் கையெழுத்தாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

இதைத் தொடர்ந்து 31-ம் தேதி, புலம்பெயர்ந்த தமிழர்களுடன் கலந்துரையாடுகிறார். செப்டம்பர் 2-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை சிகாகோவில் தங்கும் முதல்வர் ஸ்டாலின், ஃபார்ச்சூன் 500’ பட்டியலில் உள்ள சர்வதேச முன்னணி நிறுவனங்களின் தலைவர்களுடன் பேசுகிறார்.

செப்டம்பர் 7-ம் தேதி அயலக தமிழர்கள் உடனான சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார். அமெரிக்காவில் 17 நாட்கள் தங்கி, பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் முதல்வர் ஸ்டாலின், செப்டம்பர் 12-ம் தேதி சென்னை திருப்ப இருக்கிறார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

chief minister mk stalin going to america


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->