இரண்டு நாள் பயணமாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மதுரை வருகை.! - Seithipunal
Seithipunal


முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று இரண்டு நாள் பயணமாக மதுரை மாவட்டத்திற்கு வருகை புரிகிறார். இதற்காக இன்று காலை ஒன்பது மணிக்கு சென்னையில் இருந்து விமானத்தின் மூலம் வருகிறார். அங்கு அவருக்கு அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர் மற்றும் உயரதிகாரிகள் உள்ளிட்டோர் வரவேற்பு அளிக்க உள்ளனர்.

இதையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கார் மூலம் அழகர்கோவில் சாலையில் உள்ள சுற்றுலா விருந்தினர் மாளிகைக்குச் செல்கிறார். அதன் பின்னர் மதுரை ஆட்சியர் அலுவலகத்திற்குச் சென்று அங்கு நடக்கும் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டு அரசின் வளர்ச்சி திட்டங்கள் மற்றும் மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கு போன்றவற்றை குறித்து ஆலோசனை நடத்துகிறார்

இந்த கூட்டத்தில் மதுரை, சிவகங்கை, தேனி, ராமநாதபுரம் மற்றும் திண்டுக்கல் உள்ளிட்ட ஐந்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள். 

இதைத்தொடர்ந்து, மதுரை மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு வளர்ச்சி பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்கிறார். மேலும், நாளை மதுரையில் கட்டப்பட்டு வரும் கலைஞர் நூலக பணிகளையும் பார்வையிட உள்ளார்.

இதன் பிறகு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆழ்வார்புரம்-ஓபுளா படித்துறை இணைப்பு பாலத்தையும், மறைந்த முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையாவின் மணிமண்டபத்தையும் திறந்து வைக்க உள்ளார். 

முதலமைச்சர் மு.க ஸ்டாலினின் இந்த வருகையை முன்னிட்டு மதுரையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chief minister mk stalin comes to madurai


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->