மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி பிறந்தநாள் : முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து.!
chief minister mk stalin birthday wishes to mamtha banarji
இன்று மேற்கு வாங்க மாநிலத்தின் முதலமைச்சரும், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் நிறுவனத் தலைவருமான மம்தா பானர்ஜி தனது 68 ஆவது வயது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

பிறந்தநாளை முன்னிட்டு இவருக்கு பல அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் என்று பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில், தமிழகத்தின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

"மேற்கு வங்க மாநிலத்தின் முதலமைச்சர் மம்தா பானர்ஜி அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவர் எப்போதும் நல்ல உடல் நலத்தோடும் மகிழ்ச்சியோடும் திகழ விழைகிறேன்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
English Summary
chief minister mk stalin birthday wishes to mamtha banarji