நாமக்கல்லில் முட்டைக்கோழி கிலோவுக்கு ரூ.05 குறைந்துள்ளது..!
Chicken in Namakkal has decreased by Rs 5 per kg
நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட முட்டை கோழி பண்ணைகள் உள்ளன. இங்கு வளர்க்கப்படும் கோழிகள் மூலம் தினமும் 05 கோடிக்கும் அதிகமான முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இதற்கு நாமக்கலில் தினமும் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
அதன்படி முட்டைக்கோழி கிலோ ரூ.107-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. நேற்று நாமக்கல்லில் நடந்த முட்டைக்கோழி ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.5 குறைக்க முடிவு செய்தனர். தற்போது, முட்டைக்கோழி விலை கிலோ ரூ.102 ஆக குறைந்துள்ளது.
முட்டை கொள்முதல் விலை 540 காசுகளாகவும், கறிக்கோழி விலை கிலோ ரூ.106 ஆகவும் நீடிக்கிறது. அவற்றின் விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை என பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
English Summary
Chicken in Namakkal has decreased by Rs 5 per kg