அமைச்சர் பொன்முடி மீதான ஊழல் வழக்கு.. விசாரணைக்கு தடை விதிக்க முடியாது.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி..!! - Seithipunal
Seithipunal


அமைச்சர் பொன்முடி மீதான ஊழல் வழக்கின் இணை குற்றவாளியான அமைச்சரின் மகன் கௌதமசிகாமணி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது!!

தற்போதைய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கடந்த 2007 முதல் 2011 வரை சுரங்கம் மற்றும் கனிம வளத்துறை அமைச்சராக இருந்த போது தனது பதவியை தவறாக பயன்படுத்தி குவாரி உரிமம் வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டது.

அவரது மகன், நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு ஆதரவாக குவாரி உரிமம் வழங்கியதாக விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் (எம்.பி.க்கள்) மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு தற்பொழுது நிலுவையில் உள்ள நிலையில் இரண்டாவது குற்றவாளியாக அமைச்சர் பொன்முடியின் மகன் கௌதம் சிகாமணி சேர்க்கப்பட்டார்.

இந்த வழக்கை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும் என்றும், சிறப்பு நீதிமன்றத்தின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் தடை விதிக்க வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சந்திரசேகரன் தலைமையிலான சென்னை உயர்நீதிமன்ற அமர்வு 2,64,644 லாரிகள் அதிகப்படியான சிவப்பு மணலை சட்ட விரோதமாக எடுத்ததாக மனுதாரர் மற்றும் பிற குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான குற்றச்சாட்டு என நீதிபதி சுட்டிக்காட்டினார்.

குவாரி உரிம நிபந்தனைகளை அப்பட்டமாக மீறியதாகவும், அனுமதிக்கப்பட்ட வரம்பை மீறி அள்ளப்பட்ட சிவப்பு மணலுக்கான சுங்க கட்டணத்தை செலுத்தாமல் பொது கருவூலத்திற்கு ₹28,36,40,600 இழப்பு ஏற்படுத்தியதாகவும் அரசுத் தரப்பு குற்றம்சாட்டியதையும் நீதிபதி குறிப்பிட்டார். இந்த வழக்கில் சாட்சியங்களை பரிசீலிப்பதில் இருந்து இறுதி அறிக்கையில் சொல்லப்பட்டுள்ள குற்றங்களை மனுதாரர் செய்துள்ளார் என்று கருதுவதற்கும், தகுந்த குற்றச்சாட்டுகளை முன்வைப்பதற்கும் ஒத்த கருத்தை உருவாக்குவதற்கு ஆதாரங்கள் உள்ளன என நீதிபதி கூறினார்.

எனவே 1988ம் ஆண்டு ஊழல் தடுப்புச் சட்டம் பிரிவு 19(3)(c) இன் கீழ் சிறப்பு நீதிமன்றத்தின் கோப்பு மீதான மேல் நடவடிக்கைகளுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட வேண்டும் என்ற இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார்.

அதன்படி அமைச்சர் பொன்முடியின் ஊழல் வழக்கின் இணை குற்றவாளியான அமைச்சரின் மகன் பி.கௌதமசிகாமணி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் 28 கோடி ரூபாய் ஊழல் வழக்கை அமைச்சர் பொன் முடியும் அவருடைய மகன் கெளதம் சிகாமணியும் எதிர்கொள்ள வேண்டியது கட்டாயம் ஏற்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ChennaiHC refuses to stay on corruption case investigation against ponmudi


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->