வழக்கு இருந்தாலும் போலி பத்திரங்களை ரத்து செய்யலாம்.. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!! - Seithipunal
Seithipunal


செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த 2000ம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரை பதிவு செய்யப்பட்ட 9 பத்திரங்கள் போலியானவை என்று அறிவித்து அவற்றை ரத்து செய்ய வேண்டும் என நடேசன் என்பவர் மாவட்ட பத்திரிகை பதிவாளரிடம் புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில் ஐனாஸ் என்பவரை அசல் ஆவணங்களுடன் நேரில் ஆஜராகுமாறு மாவட்ட பதிவாளர் நோட்டீஸ் அனுப்பி இருந்தார்.

இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஐனாஸ் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்பொழுது நடேசன் என்பவர் உரிமையியல் நீதிமன்றத்தில் ஏற்கனவே தாக்கல் செய்த வழக்கு நிலுவையில் உள்ளதால் இந்த புகாரை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளக் கூடாது என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இதனை எதிர்த்து அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மாவட்ட பதிவாளர்களுக்கு போலி பத்திரம் மற்றும் பதிவு தொடர்பாக விசாரணை நடத்த அதிகாரம் உள்ளது. அதன் அடிப்படையிலேயே மனுதாரருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டதாக வாதிட்டார். 

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்தாலும் மாவட்ட பதிவாளரிடம் புகார் அளிக்கும் உரிமையை பறிக்க முடியாது எனவும், இந்த வழக்கை பொறுத்தவரை மாவட்ட பதிவாளரின் நோட்டீசுக்கு இரண்டு வாரங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் எனவும் இருதரப்பினர் கருத்துக்களைக் கேட்டு புகார் மனு மீது 12 வாரங்களுக்குள் மாவட்ட பதிவாளர் முடிவு எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்ட நீதிபதி இந்த வழக்கை முடித்து வைத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ChennaiHC order Fake bonds can be canceled if case is pending


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->