சட்டம் அமலுக்கு வந்த முதல் நாளில் ரூ.15 லட்சம் வசூல் செய்த சென்னை போக்குவரத்து காவல்துறை! - Seithipunal
Seithipunal


நேற்று மட்டும் 2500 வழக்குகள் பதிவு! 

தமிழக அரசு கடந்த 20ம் தேதி மத்திய அரசின் புதிய மோட்டார் வாகன சட்டத்தை அமல்படுத்தும் வகையில் தமிழக போக்குவரத்து துறை அரசாணை ஒன்றை வெளியிட்டது. அந்த அரசாணையில் ஆம்புலன்ஸ், தீயணைப்பு உள்ளிட்ட அவசரகால வாகனங்களுக்கு வழிவிட தவறினால் ரூ.10,000 அபராதம், பொதுமக்களுக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய வகையிலும் பந்தயத்திலும் ஈடுபட்டால் ₹10,000 அபராதம்.

மேலும் ஒலி எழுப்ப கூடாத இடங்களில் ஒலி எழுப்பினாலும், அதிக ஒலி எழுப்பக்கூடிய சைலன்ஸர்களை  இருசக்கர வாகனங்களில் பயன்படுத்தினால் ரூ.1000 அபராதம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் காப்பீடு செய்யப்படாத வாகனங்களுக்கு ரூ.2000 அபராதம், தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டினால் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என அரசாணையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்தச் சட்டம் நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறையினர் நேற்று முதல் அபராத தொகையை வசூலிக்க தொடங்கினர். அதன் அடிப்படையில் நேற்று மட்டும் 2500 வழக்குகள் சென்னை மாநகர போக்குவரத்து போலீசார் பதிவு செய்துள்ளனர். ஹெல்மெட் அணியாமல் சென்றால் பழைய சட்டத்தின் படி ரூ.100 வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று முதல் ரூ.1000 வசூலிக்கப்பட்டு வருகிறது.

சென்னை மாநகரத்தில் மட்டும் நேற்று ஹெல்மெட் அணியாமல் சென்ற வாகன ஓட்டிகள் மீது 1000 வழக்குகள் மேல் பதிவு செய்யப்பட்டுள்ளது. மது அருந்திவிட்டு வாகனம் ஒட்டியவர்கள் மீது 75 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் புதிய மோட்டார் வாகனச் சட்டத்தின் படி ரூ.10,000 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இன்றும் இரண்டாவது நாளாக சென்னை போக்குவரத்து காவல்துறையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai Traffic Police has collected fifteen lakh rupees


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->