தொழில்நுட்பக் கோளாறு; சென்னை - மதுரை இண்டிகோ விமான சேவை ரத்து: பயணிகள் அவஸ்த்தை..!
Chennai to Madurai Indigo flight service cancelled due to technical glitch
சென்னையில் இருந்து மதுரை செல்லவிருந்த இண்டிகோ விமானத்தில் திடீர் தொழில்நுட்பக் கோளாறு கண்டறியப்பட்டது. அதனை தொடர்ந்து, விமான சேவை ரத்து செய்யப்பட்டது. கடந்த ஜூன் 12-ஆம் தேதி ஆமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்டஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது. இதில், 274 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனை தொடர்ந்து, தொழில்நுட்ப பிரச்னை உள்பட பல்வேறு காரணங்களால் ஏர் இந்தியா உள்பட பல்வேறு விமானங்களின் சேவை அடுத்தடுத்து பாதிப்புக்குள்ளானது. இது விமானப் பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்த பட்டியலில், இன்று, சண்டிகரில் இருந்து லக்னோ செல்லவிருந்த இண்டிகோ விமானத்தின் சேவை திடீரென ரத்து செய்யப்பட்டது. விமானம் புறப்படுவதற்கு முன்பான சோதனையின் போது விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு இருப்பதை விமானி கண்டறிந்தார். முன்னெச்சரிக்கை நடவடிக்கை விமானத்தில் இருந்த பயணிகள் இறக்கி விடப்பட்டனர். மேலும், இந்த விமானத்தின் சேவையும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து, பயணிகளுக்கு மாற்று விமான வசதியோ அல்லது முழு பணத்தை திருப்பி தர தயாராக இருப்பதாக இண்டிகோ விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்திய சம்பவத்தை தொடர்ந்து, இன்று சென்னையில் இருந்து மதுரை செல்ல இருந்த இண்டிகோ விமானமும் திடீரென ரத்து செய்யப்பட்டது. குறித்த விமானத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக ரத்து செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனால், டிக்கெட் முன்பதிவு செய்திருந்த விமான பயணிகள் மாற்று விமானத்தில் பயணிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. தொடர்ந்து விமானங்களில் இவ்வாறான கோளாறுகள், திடீர் ரத்து காரணமாக பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
English Summary
Chennai to Madurai Indigo flight service cancelled due to technical glitch