சென்னைக்கு படையெடுக்கும் மக்கள்! கடும் போக்குவரத்து நெரிசல்!
Chennai Tambaram Traffic
சென்னை, தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
தொடர் விடுமுறை முடிந்து மீண்டும் மக்கள் சென்னை திரும்பும் நிலையில், இந்த போக்குவரத்து னரிஸல் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
இதேபோல் பரனூர் சுங்கசாவடியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
விநாயகர் சதுர்த்தி மற்றும் வார இறுதி நாள் விடுமுறைகள் முடிந்ததால், தென் மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கி மக்கள் படை எடுத்து வருகின்றனர்.
ஆயிரக் கணக்கான வாகனங்கள் ஒரே நேரத்தில் சென்னை நோக்கி கிளம்பியுள்ளதால், செங்கல்பட்டு அடுத்த பரனூர் சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
போக்குவரத்து நெரிசலைக் குறைக்க கூடுதல் பூத் திறக்கப்பட்டு வாகனங்கள் அதிக அளவில் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.
இருப்பினும் போக்குவரத்து நெரிசல் குறைய வில்லை என்று வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டுகின்றனர்.