சென்னை தி.நகரில் பரபரப்பு...! ரூ.28 கோடி நகைகள் பறிமுதல்...! - தேர்தல் கட்டுப்பாடு கடுமை - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் அறிவிப்பு வெளியான தருணத்திலிருந்தே நடத்தை விதிமுறைகள் கடுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளன.

வாக்காளர்களை பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் மூலம் பாதிக்க முயலும் நடவடிக்கைகளை தடுக்க, தேர்தல் பறக்கும் படையினர் மாநிலம் முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக, வாகன சோதனைகள் பலப்படுத்தப்பட்டு, தேவையான ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணமும் நகைகளும் தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.

அவ்வகையில், சென்னை தி.நகரில் நடைபெற்ற திடீர் சோதனையின் போது, ரூ.28 கோடியே 54 லட்சம் மதிப்பிலான தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்த நகைகள் நகைக்கடைகளுக்காக எடுத்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டாலும், உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படாத காரணத்தால், அவை பறிமுதல் செய்யப்பட்டு நுங்கம்பாக்கம் வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன என தெரிவிக்கப்படுகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Chennai T Nagar state panic 28 crores jewellery seized Election control tightened


கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!




Seithipunal
--> -->