வைகை எக்ஸ்பிரஸ் பயணிகளுக்கு முக்கிய தகவல்...! - நாளை தாமதமாக புறப்படும்...! - Seithipunal
Seithipunal


தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது,"சென்னை மண்டலத்தில் சிங்கப்பெருமாள்கோவில் - செங்கல்பட்டு இடையே நடைபெற உள்ள பொறியியல் பராமரிப்பு பணிகளின் காரணமாக, ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் படி, சென்னை எழும்பூரில் இருந்து மதுரைக்கு இயக்கப்படும் வைகை விரைவு ரெயில் (வண்டி எண் 12635), வழக்கமான நேரத்தை விட தாமதமாக புறப்படும்.

மதியம் 1.15 மணிக்கு புறப்பட வேண்டிய இந்த ரெயில், ஒரு மணி நேரம் தாமதமாக மதியம் 2.15 மணிக்கு புறப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

பயணிகள் இந்த மாற்றத்தை கருத்தில் கொண்டு தங்கள் பயணத் திட்டங்களை முன்னதாகச் சரிசெய்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Important information Vaigai Express passengers Departure delayed tomorrow


கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!




Seithipunal
--> -->