தஞ்சையில் கொடூரம்...! வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி படுகொலை...! நடந்தது என்ன...?
Horror Thanjavur Murder old woman who alone home What happened
தஞ்சாவூர் மாவட்டம் பள்ளியக்ரஹாரம் அகிலாம்பாள்பேட்டை பகுதியில் தனியாக வாழ்ந்து வந்த 72 வயதான மூதாட்டி அம்சு, தினசரி கீரை வியாபாரம் செய்து வாழ்வாதாரம் நடத்தி வந்தார்.
இந்த நிலையில், நேற்று காலை அவரது வீட்டில் ரத்தக் குளத்தில் உயிரிழந்த நிலையில் கிடந்ததை அக்கம்பக்கத்தினர் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இந்தச் சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும், தஞ்சை கிழக்கு காவலர்கள் உடனடியாக விரைந்து வந்து, உடலை கைப்பற்றி தீவிர விசாரணை தொடங்கினர்.
மேலும் ஆரம்பக் கட்ட விசாரணையில், மர்ம நபர்கள் மண்வெட்டி போன்ற ஆயுதம் பயன்படுத்தி கொடூரமாக தாக்கி இந்த படுகொலை செய்திருப்பது தெரியவந்தது என தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக காவலர்கள் வழக்குப்பதிவு செய்து, கொலைக்கான காரணம், சம்பந்தப்பட்ட நபர்கள் உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணையை விரிவுபடுத்தியுள்ளனர்.
மேலும் குற்றவாளிகளை விரைவில் பிடிக்க சிறப்பு குழுவும் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
English Summary
Horror Thanjavur Murder old woman who alone home What happened