திருமண வாக்குறுதி மோசடி...! பாலியல் பலாத்காரம் வழக்கில் வக்கீலுக்கு 10 ஆண்டு சிறை...!
Marriage promise fraud Lawyer gets 10 years prison harassement case
விழுப்புரம் மாவட்டம் பெரியசெவலை பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் சிவராஜ் (33), கடந்த 2016-ஆம் ஆண்டு திருமணம் செய்வதாக நம்பிக்கை அளித்து ஒரு பெண்ணை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த சம்பவம் தொடர்பான புகாரின் அடிப்படையில், உளுந்தூர்பேட்டை அனைத்து மகளிர் காவலர்கள் நடவடிக்கை மேற்கொண்டு அவரை கைது செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த விழுப்புரம் மகளிர் நீதிமன்ற நீதிபதி வினோதா, குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து சிவராஜுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அரசு சார்பில் ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார்.இதையடுத்து, சிவராஜ் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார் என தெரிவிக்கப்படுகிறது.
English Summary
Marriage promise fraud Lawyer gets 10 years prison harassement case