குதிரை சிவாவை குச்சுக்குள் வைத்து கவனித்த காவல்துறை... நிபந்தனையுடன் வெளியே வந்தும் அரங்கேற்றிய சம்பவங்கள்..!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் சென்னையில் உள்ள எழும்பூர் பகுதியில் சுற்றுவட்டார பகுதியில் அதிகாலை நேரத்தில் நடைப்பயிற்சியில் ஈடுபட்ட நபர்களிடம் தொடர் வழிப்பறி நடைபெற்றுள்ளது. மேலும், வழிப்பறியில் ஈடுபடும் நபர் முகமூடி அணிந்து அலைபேசி பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. 

இந்த விஷயம் குறித்து காவல் துறையினர் சிசிடிவி காமிராக்கள் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், மர்ம நபரின் புகைப்படத்தை அணைத்து காவல் நிலையத்திற்கும் அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில், கொரோனா தடுப்பு பணிகளின் காரணமாக விசாரணையில் தொய்வு ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில், கடந்த 11 ஆம் தேதியன்று கோட்டுர்புரம் பகுதியில் நடைப்பயிற்சிக்கு சென்ற நபரின் அலைபேசியை பறிக்க முயற்சி செய்த நபரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில், செயின் தாமஸ் பகுதியை சார்ந்த வினோத் அலெக்ஸ்சாண்டர் என்கிற குதிரை சிவா என்பது தெரியவந்துள்ளது. 

இவன் கடந்த 2011 ஆம் வருடத்தில் இருந்து திருட்டு மற்றும் கொள்ளை வழக்கில் ஈடுபட்டு பல நாட்கள் சிறையில் கழித்து வருவதும் தெரியவந்துள்ளது. இவன் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்ததால் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில், அலைபேசி பறிப்பு மற்றும் சங்கிலி பறிப்பு போன்ற குற்றத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.

சென்னையில் உள்ள பல்வேறு காவல் நிலையத்தில் சுமார் 25 க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ள நிலையில், குண்டர் சட்டத்தின் கீழ் கடந்த 9 மாதமாக சிறையில் இருந்த நிலையில், கொரோனா பாதிப்பு காரணமாக நிபந்தனை ஜாமினில் வெளியே வந்ததும், இரவு நேரத்தில் கிடைக்கும் மறைவு இடங்களில் உறங்கி, திருட்டில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்துள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Chennai robbery horse siva @ vinoth thief arrest by police


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->