#சென்னை | காதலியின் "பாய் பெஸ்டி"யை உயிரோடு கொளுத்திய காதலன்! - Seithipunal
Seithipunal


சென்னை வியாசர்பாடி அருகே காதலியின் "பாய் பெஸ்டி"யை உயிரோடு கொளுத்திய காதலனை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வியாசர்பாடியை ராஜேஷ் என்பவர், புளியந்தோப்பு பகுதியில் ஆடு தொட்டியில் ஆடுகளை பராமரிக்கும் பணியை செய்து வந்துள்ளார்.

சம்பவம் நடந்த அன்று ராஜேஷ் தன் பணியை முடித்து விட்டு அருகில் நிறுத்தப்பட்டிருந்த மினி வேன் ஒன்றில் தூங்கியதாக சொல்லப்படுகிறது.

அந்நேரம் அங்கு வந்த ஒரு மர்ம நபர், ராஜேஷ் மீது தீயை பற்ற வைத்துவிட்டு தப்பி ஓடியுள்ளார். பலத்த தீக்காயமடைந்த ராஜேஷ்-யை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், சிசிடிவி கட்சிகளின் அடிப்படியில் விசாரணை நடத்தி, வியாசர்பாடியை சேர்ந்த பஷீர் என்பவரை கைது செய்தனர். 

மேலும் அவரிடம் போலீசார் நடத்திய சிறப்பு விசாரணையில், ஹாஜிரா என்ற பெண்ணை பஷீர் காதலித்து வந்து உள்ளார். ஆனால், இந்தக்காதலுக்கு பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே, ஹாஜிரா தன் ஆண் நண்பரான ராஜேஷ் உடன் நெருங்கி பழகி வருவதை அறிந்த பஷீர், ஆத்திரத்தில் ராஜேஷ் மீது தீ வைத்து கொலை செய்ய முயன்றது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai Puliyanthoppu boy bettie attempt murder


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் லியோ திரைப்படம் எப்படி இருக்கு? உங்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா?Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் லியோ திரைப்படம் எப்படி இருக்கு? உங்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா?
Seithipunal
-->