சென்னையில் பல்வேறு இடங்களில் மின்தடை: பொதுமக்கள் அவதி! - Seithipunal
Seithipunal


சென்னையில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக நேற்று இரவு முதல் மின்தடை ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர். 

மிக்ஜம் புயல் காரணமாக திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் நேற்று மாலை முதல் பலத்த காற்றுடன் கனமழை பெய்கிறது. 

புயல் காரணமாக இன்று இரவு வரை சூறாவளி காற்றுடன் கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

இந்நிலையில் சென்னையில் ஆவடி, வடசென்னை, போரூர், தாம்பரம் உள்ளிட நகரங்களில் நேற்று இரவு முதல் மின்தடை செய்யப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக மின்துறை அமைச்சர் தெரிவித்திருப்பதாவது, துணை மின் நிலையங்களில் மழை நீர் தேங்கியுள்ளதால் மின் துண்டிப்பு செய்யப்பட்டு மழை நீர் வெளியேற்றப்பட்டதும் மீண்டும் மின்சாரம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். 

சென்னை முழுவதும் கனமழை பெய்து வருவதால் பெரும்பாலான கடைகளும் மூடப்பட்டுள்ளதால் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai Power cut Public suffering


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->