#சென்னை || போக்குவரத்து விதி மீறல் அபராதமாக ரூ.61 லட்சத்தை வாரி குவித்த காவல்துறை..!! - Seithipunal
Seithipunal


சென்னையில் மட்டும் போக்குவரத்து விதிமிறலில் ஈடுபட்டு நிலுவையில் இருந்த வழக்குகளில் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் ரூ.61 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் "சென்னை பெருநகரத்தில் பல்வேறு போக்குவரத்து விதிமீறல் சம்பவங்களுக்காக சராசரியாக தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்படுகிறது.

இருப்பினும் விதி மீறல்களில் ஈடுபடும் பெரும்பாலானவர்கள் அபராத தொகையை சரியான நேரத்தில் செலுத்துவதில்லை. இதன் காரணமாக சென்னை பெருநகரத்தில் 10 அழைப்பு மையங்கள் அறிமுகம் செய்யப்பட்டது.

இந்த அழைப்பு மையங்கள் மூலம் விதி மீறி அபராதம் செலுத்தாதவர்களை தொலைபேசியின் மூலம் அழைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இதன் மூலம் உரிய பதில் கிடைக்காததால் கடந்த ஜனவரி 27 ஆம் தேதி அன்று 166 இடங்களில் திடீரென வாகன சோதனை நடத்தப்பட்டது. இந்த வாகன சோதனையில் 5,757 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ரூ. 17,42,000 அபராத தொகை வசூலிக்கப்பட்டது.

அதேபோன்று கடந்த பிப்ரவரி 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் மீண்டும் சிறப்பு சோதனை சாவடிகள் ஏற்படுத்தப்பட்டு வாகன தணிக்கை நடத்தப்பட்டது. இந்த சோதனையிலன் மூலம் 21,175 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ரூ.61,70,420 வசூலிக்கப்பட்டுள்ளது" என சென்னை போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai Police collected Rs61 lakh for traffic rules violation


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->