காதலன் திட்டியதால் மனவருத்தம்.. 15 வயது காதலி தூக்கிட்டு தற்கொலை.! - Seithipunal
Seithipunal


காதலர் தன்னை திட்டியதால், மனமுடைந்த 15 வயது காதலி தற்கொலை செய்துகொண்டார்.

சென்னையில் உள்ள பல்லாவரம் பம்மல் நாகல்கேணி அருகே இருக்கும் ஆதம் நகரை சார்ந்தவர் அமுதா. இவரது மகள் மதுமிதா (வயது 15). மதுமிதா அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வந்துள்ளார். கடலூர் மாவட்டத்தில் உள்ள திட்டக்குடியை சார்ந்த உறவினருடன் மதுமிதா காதல் வயப்பட்டுள்ளார். 

இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில், இவர்களின் காதல் விவகாரம் இருவீட்டு நபர்களுக்கும் தெரியும் என்று கூறப்படுகிறது. தினமும் மதுமிதா தனது காதலருடன் பேசுவதை வழக்கமாக வைத்துள்ளார். சம்பவ தினமான நேற்றும் மதுமிதா காதலருடன் பேசியுள்ளார். 

இதன்போது, இவர்களுக்குள் திடீரென வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், காதலன் மதுமிதாவை தரக்குறைவாக பேசி திட்டி இருக்கிறார். இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்த மதுமிதா, தற்கொலை செய்துகொள்ளலாம் என முடிவெடுத்துள்ளார். 

வீட்டில் ஆட்கள் இல்லாத நேரத்தில் மதுமிதா தூக்கிட்டு தற்கொலை செய்துகொள்ளவே, வீட்டிற்கு வந்த தாய் மகள் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர், இதுகுறித்து சங்கர் நகர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் தூக்கில் தொங்கிய மதுமிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai Pallavaram Girl MadhuMitha Suicide due to Love Boy Hate Speech


கருத்துக் கணிப்பு

பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டுவர திமுக அரசு குரல் கொடுக்க வாய்ப்பு?Advertisement

கருத்துக் கணிப்பு

பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டுவர திமுக அரசு குரல் கொடுக்க வாய்ப்பு?
Seithipunal