இன்று இரவு முதல் தடை! கடும் எச்சரிக்கை விடுத்த போலீசார்! - Seithipunal
Seithipunal


புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்கும் நோக்கில் சென்னையில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

இன்று இரவு 8 மணி முதல் நாளை மாலை 6 மணி வரை மெரினா கடற்கரையில் போர் நினைவிடம் முதல் கலங்கரை விளக்கம் வரை உள்ள சாலைகளில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், கடற்கரை உட்புற சாலை முழுவதுமாக மூடப்பட்டு வாகனங்கள் நிறுத்த அனுமதிக்கப்படாது. பெசன்ட் நகர் கடற்கரையில் ஆறாவது அவென்யூ சாலை மூடப்படுகிறது.

ஒருவேளை நீங்கள் மெரினா கடற்கரைக்கு செல்ல விரும்பினால், சிவானந்தா சாலை, வாலாஜா சாலை, பாரதி சாலை உள்ளிட்ட இடங்களில் பார்க்கிங் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், சென்னையில் பைக் ரேஸ் மற்றும் வீலிங்கில் ஈடுபடும் வாகனங்களை கண்டறிய பிரத்யேக சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுவோரை கண்காணிக்க வாகன தணிக்கையில் ஈடுபட உள்ளனர்.

இன்று மாலை 6 மணிக்கு மேல் கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

வழிப்பறி சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை கண்காணிக்க பிரத்யேக கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு, போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

புத்தாண்டு கொண்டாட்ட கூட்டத்தில் குழந்தைகள் தொலைந்தால் உடனடியாக புகார் அளிக்க ஆங்காங்கே முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai New Year Celebration Police under control 2023


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->