மெட்ரோவில் செல்ல டிக்கெட் தேவையில்லை வாட்ச் இருந்தா போதும்.! அமலுக்கு வரும் புதிய திட்டம்.! - Seithipunal
Seithipunal


சென்னையில் போக்குவரத்து நெரிசளை குறைக்க நெருக்கடியை குறைப்பதற்காக மெட்ரோ ரெயில் திட்டம் உருவாக்கப்பட்டது. இந்த திட்டத்தின் முதற்கட்டமாக வண்ணாரப்பேட்டை முதல் மீனம்பாக்கம் விமான நிலையம் வரை தற்போது யணிகள் சேவை நடந்து வருகிறது. 

அன்றாடம் மெட்ரோ ரயிலில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகள்  பயணம் மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்தநிலையில், சென்னை மெட்ரோ நிறுவனம் பயணிகளின் வசதிக்காக புதிய ஸ்மார்ட் கைக்கடிகாரத்தை விரைவில் அறிமுகம் செய்கிறது. 

இது தொடர்பாக மெட்ரோ ரெயில் அதிகாரி கூறியதாவது , ‘டைட்டன்’ வாட்ச் நிறுவனம் புதிய ‘சிப்’ பொருத்திய கைக்கடிகாரத்தை தயாரிக்கிறது. அந்த வாட்ச் மூலமாக பயணிகள் மெட்ரோ ரயில் நிலையத்துக்கு எளிதாக செல்ல முடியும்.

மெட்ரோ பயணம் செய்யும் பயணிகள் கையில் சிப்’ பொருத்திய ஸ்மார்ட் கடிகாரத்தை அணிந்து கொண்டு மெட்ரோ நுழைவு பாதையில் சென்றால் ரயில் கதவுகள் தானாக திறக்கும். இதனால் பயணிகள் மிக விரைவாக ரயில் நிலையத்துக்கு செல்ல முடியும். 

இந்த ஸ்மார்ட் கைக்கடிகாரத்தின் விலை 1,000 ருபாய் முதல் ரூ, 1,500 ரூபாய் வரை பல்வேறு மாடல்களில் கிடைக்கிறது. இந்த கைக்கடிகாரத்தை மெட்ரோ ரயில் நிலையங்களில் பெற்று கொள்ளலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chennai metro passengers new method


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->