#BREAKING || சிஎஸ்கே ரசிகர்களே.. மெட்ரோவில் இலவசம் பயணம் ரத்து.. மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு..!!
Chennai Metro admin notice Metro train is not free for IPL matches
ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடும் சில போட்டிகள் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற நிலையில் மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் சென்னை அணியின் ரசிகர்கள் கிரிக்கெட் டிக்கெட்டை வைத்து இலவசமாக பயணம் மேற்கொள்ளலாம் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்திருந்தது.

அந்த அறிவிப்பில், "ஐபிஎல் 16ஆவது சீசன் தற்போது நடைபெறும் சூழலில், சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (சி.எம்.ஆர்.எல்) மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் (சி.எஸ்.கே) ஆகியவை இணைந்து ஏப்ரல்/மே மாதங்களில் சென்னையில் நடக்கும் அனைத்து போட்டி நாட்களிலும் ஐபிஎல் மற்றும் சிஎஸ்கே ரசிகர்களுக்களும் சிரமம் இன்றி பயணம் மேற்கொள்ள இலவச பயணம் மேற்கொள்ளலாம்" என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் மெட்ரோ ரயிலில் இலவசம் இல்லை என மெட்ரோ ரயில்ல் நிறுவனம் அறிவித்துள்ளது. வரும் 23, 24ம் தேதிகளில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் ஐ.பி.எல் ப்ளே ஆஃப் போட்டிகளை பார்க்க வருகை தரும் கிரிக்கெட் ரசிகர்கள் சென்னை மெட்ரோ ரயிலில் பயணிக்க பயணச்சீட்டுகளை பெற வேண்டும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது
English Summary
Chennai Metro admin notice Metro train is not free for IPL matches