சானிடைசரை வைத்து கைகளை சுத்தப்படுத்தி, நுரையீரலுக்கு ஆப்பு... உடலெல்லாம் பற்றிய தீ.. பாத்ரூமில் ஐயோ, அம்மா கதறல்.! - Seithipunal
Seithipunal


கிருமி நாசினியை வைத்து கைகளை சுத்தப்படுத்திய கையுடன், சிகரெட்டை பற்ற வைத்தால் அது தீப்பிடித்து எரிந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் முதியவர் மருத்துமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளார். 

கொரோனா பரவலை கட்டுபடுத்த கைகளை சேர்த்து அடிக்கடி சுத்தப்படுத்த வேண்டும் என்றும், முகக்கவசம் அணிய வேண்டும் என்றும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் அரசு மற்றும் மருத்துவர்கள் சார்பாக வலியுறுத்தி பற்றி கேட்டுக் கொள்ளப்பட்டு வருகிறது. 

இவற்றில், கொரோனாவில் இருந்து தற்காத்துக்கொள்ள வீடு மற்றும் அலுவலகங்கள், கடைகள் என அனைத்துப் பகுதிகளிலும் சானிடைசர் பயன்படுத்தி வருகிறது. சானிடைசர் பயன்படுத்தி வந்தாலும், அதனை பாதுகாப்புடன் கையாள வேண்டும் என்ற விழிப்புணர்வு மக்களிடையே இல்லாமல் இருக்கிறது. 

இந்நிலையில், அலட்சியம் காரணமாக சானிடைசர் உபயோகம் செய்த கையுடன் சிகரெட்டைப் பற்றவைத்து, முதியவர் உடலில் தீ பிடித்து உயிருக்கு ஆபத்தான சூழல் ஏற்பட்டுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. 

சென்னையில் உள்ள அசோக் நகர் பகுதியைச் சேர்ந்த முதியவர் ரூபன் (வயது 50). இவர் கோடம்பாக்கம் மருத்துவர் சுப்பராயன் நகரில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் இயங்கி வரும் பதிப்பகத்தில் பணியாற்றி வருகிறார். அலுவலக பணி காரணமாக வெளியே சென்றுவிட்டு, மீண்டும் அலுவலகத்திற்கு வந்து ரூபன் கைகளை சுத்தம் செய்துள்ளார். 

இதில், சானிடைசர் துளிகள் சில சட்டையில் விழுந்த நிலையில், புகைபிடிக்கும் பழக்கம்கொண்ட ரூபன் அலுவலகத்தில் உள்ள கழிவறைக்கு சென்று தன்னிடமுள்ள லைட்டரை எடுத்து சிகரெட்டை பற்ற வைத்துள்ளார். கைகளை மறைத்துக் கொண்டு சிகரெட்டை பற்ற வைத்த போது, அவரது கைகளில் இருந்த சானிடைசர் பற்றி எறியவே, பதறிப்போய் கைகளை சட்டையில் அணைக்க முயற்சிக்கையில் சட்டையிலும் தீ பிடித்துள்ளது. 

தீயின் வலியால் அலறிய ரூபனின் சத்தம் கேட்டு, அலுவலக பணியாளர்கள் அவரை மருத்துமனையில் அனுமதி செய்தனர். கைகள், கழுத்து, மார்பு, வயிறு பகுதிகளில் தீக்காயமடைந்த ரூபனுக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விஷயம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

மேலும், சானிடைசர் எளிதில் தீப்பற்றக் கூடியது. ஏனெனில், அது ஆல்கஹால் சம்பந்தப்பட்ட சானிடைசர் ஆகும். இது போன்ற செயல்களில் இனி யாரும் ஈடுபடக்கூடாது. சானிடைசரில் அறுபது விழுக்காட்டுக்கு மேல் ஈத்தைல் ஆல்கஹால் இருப்பதால், இது எளிதில் தீப்பற்றக் கூடிய தன்மை உள்ளது. சானிடைசர் பயன்படுத்தி சில வினாடிகளில் அது உலர்ந்துவிட்டால் எந்தவிதமான பிரச்சனையும் இல்லை. மாறாக பயன்படுத்திவிட்டு உடனடியாக இது போன்ற செயல்களில் ஈடுபட்டால், இந்த சோகம் நடக்கும் என்று காவல் துறையினர் அறிவுறுத்துகின்றனர்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். பாதுகாப்பாக இருங்கள்.. 

கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், உடலுக்கு குளிர்ச்சியான உணவுகளை, இயற்கையான பழச்சாறுகளை எடுத்துக்கொள்ளுங்கள். உடல்நலத்தை பாதுகாத்திடுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai Man Smoked After Sanitizer he Affected Fire and Admit Hospital 13 April 2021


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதற்கு காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதற்கு காரணம்
Seithipunal