நாளை முதல் ஒரு வருடம் சென்னையின் முக்கிய சாலையில் போக்குவரத்து மாற்றம்! - Seithipunal
Seithipunal


சென்னை மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக மாம்பலம் பிரதான சாலையில், நாளை முதல் அடுத்த ஆண்டு  ஏப்ரல் 7ம் தேதி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக,  சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

மாம்பலம் பிரதான சாலையில் தியாகராய கிராமனி சாலை சந்திப்பு முதல் ஹபிபுல்லா சாலை சந்திப்பு வரை போக்குவரத்து தடை செய்யப்படுகிறது.

மாம்பலம் பிரதான சாலையில் இருந்து கோடம்பாக்கம் மேம்பாலம் பக்கம் செல்ல விரும்பும் இலகு ரக வாகனங்கள் தியாகராய கிராமனி சாலை சந்திப்பில் தடை செய்யப்பட்டு, மேற்கண்ட வாகனங்கள் தியாகராய சாலை, வடக்கு உஸ்மான் சாலை மற்றும் ஹபிபுல்லா சாலை வழியாகவும் செல்லலாம்.

மாம்பலம் பிரதான சாலையில் கோடம்பாக்கம் மேம்பாலம் பக்கத்திலிருந்து தி.நகர் பக்கம் செல்ல விரும்பும் இலகு ரக வாகனங்கள், ஹபிபுல்லா சாலை சந்திப்பில் தடைசெய்யப்பட்டு, ஹபிபுல்லா சாலை மற்றும் வடக்கு உஸ்மான் சாலை வழியாகவும் செல்லலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

cHENNAI MAMBALAM TAKE Devotion


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->