" நான் மட்டும் மாட்டிக்கிறேன் " கையும் களவுமாக கைதான திருட்டு புள்ளிங்கோ..! அயர்லாந்து டூ மதுரவாயல்.! - Seithipunal
Seithipunal


சென்னையை அடுத்துள்ள போரூரில் வீட்டில் தனியாக வசித்து வந்த பெண்மணி சண்முக சுந்தரி (வயது 67). இவர் அண்ணாநகரில் உள்ள தனது மகளின் வீட்டிற்கு சென்றுள்ளார். இவரது மகன் அருண் முருகன் அயர்லாந்து நாட்டில் தங்கியிருந்து பணியாற்றி வருகிறார். 

இந்நிலையில், தாயார் தனியாக வசித்து வரும் வீட்டில் பாதுகாப்பு கருதி சிசிடிவி காமிராவை பொறுத்தியுள்ளார். சம்பவத்தன்று எதற்ச்சையாக சிசிடிவி காமிராவை சோதனை செய்கையில், கொள்ளையன் ஒருவன் வீட்டிற்குள் இருந்துள்ளான். 

இதனையடுத்து தனது சகோதரிக்கு விஷயத்தை உடனடியாக தெரியப்படுத்தியுள்ளார். இதனைக்கேட்ட பெண்மணி மதுரவாயல் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு காவல் துறையினர் விரைந்து சென்று திருடனை கைது செய்துள்ளனர். 

அவனிடம் மேற்கொண்ட விசாரணையில், பூட்டியிருக்கும் வீடுகளை நோட்டமிட்டு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வருவதை வாக்குமூலமாக பதிவு செய்த நிலையில், நான் திருடும் போதெல்லாம் காவல் துறையினர் சரியாக வந்து கைது செய்திடுவதாக கண்ணீர் விட்டு கதறியுள்ளான். திருட்டு வழக்கு பதிவு செய்த காவல் துறையினர், திருட்டு புள்ளிங்கோவை சிறையில் அடைத்தனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai Maduravoyal Porur Thief Pullingow arrest by police


கருத்துக் கணிப்பு

ரஜினி தனது அரசியல் நிலைப்பாட்டை வரும் ஜனவரிக்குள் அறிவிப்பாரா?
கருத்துக் கணிப்பு

ரஜினி தனது அரசியல் நிலைப்பாட்டை வரும் ஜனவரிக்குள் அறிவிப்பாரா?
Seithipunal