டிரம்ப் கனடாவுக்கு எச்சரிக்கை: சீனா உறவு வைத்தால் 100% வரி விதிக்கப்படும்...!
Trump warns Canada If you maintain relations China 100percentage tariff imposed
அமெரிக்கா முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், கனடாவை தனது நாட்டுடன் இணைக்குமாறு தொடர்ந்து எச்சரிக்கைகள் விடுத்து வருகிறார். அதற்கு பதிலாக, கனடா பிரதமர் மார்க் கார்னி தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றார்.
முன்னாள் பிரதமர் ட்ரூடோ காலத்தில் டிரம்ப் அவரை “பிரதமர்” என அழைக்காமல், “கவர்னர் ட்ரூடோ” என குறைத்த பெயர் அழைத்ததும் இரண்டு நாடுகளுக்கு இடையேயான உறவில் வித்தியாசங்களை ஏற்படுத்தியது.இதனால் கனடா–அமெரிக்கா உறவு கசக்கத் தொடங்கினாலும், கனடா சார்பில் உறவை புதுப்பிக்க முயற்சிகள் எடுத்தாலும் வெற்றி பெறவில்லை.

சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற உலக பொருளாதார மன்ற கூட்டத்தில், டிரம்ப் மற்றும் கார்னி கலந்து கொண்டனர். அந்த சந்திப்பில், டிரம்ப் அமைதி வாரியத்தில் சேர கார்னிக்கு அழைப்பு விடுத்தார், அதனை கார்னி ஏற்று ஒத்துக்கொண்டார்.
கனடாவுக்கான இந்த வாய்ப்பை அவர் உறவை புதுப்பிக்க ஒரு சந்தர்ப்பமாக கருதி எடுத்திருந்தார். இருப்பினும், டிரம்ப் கார்னியின் கோரிக்கையை நிராகரித்து, “பெரிய தலைவர்களுக்கான உருவாக்கப்பட்ட மிக உயரிய குழு; இதில் கனடாவுக்கு இடமில்லை” என்று அறிவித்தார்.
மேலும், டிரம்ப் பொதுமேடையில் கூறினார்: “கனடா அமெரிக்காவால் மட்டுமே உயிர் வாழ்கிறது”, இதனால் கார்னி சுவிட்சர்லாந்தில் பெரும் ஏமாற்றத்தை அனுபவித்து திரும்பினார்.பின்னர் கியூபெக் திரும்பிய கார்னி ஒரு வீடியோ வெளியிட்டு, டிரம்பை கடுமையாக விமர்சித்தார்.
அவர் தெரிவித்ததாவது,"கனடா அமெரிக்காவால் உயிர் வாழவில்லை; நாங்கள் கனடியர்கள் என்பதால் கனடா செழிக்கிறது. எங்கள் நாட்டின் உரிமை எங்களிடம், எங்கள் எதிர்காலம் எங்களிடமே உள்ளது.
”கார்னி மேலும் குற்றச்சாட்டை முன்வைத்து, நடுத்தர சக்தி நாடுகள் தங்களைத் தாங்களே பாதுகாக்க வேண்டும்; பெரும் சக்திகள் பொருளாதார ஒருங்கிணைப்பை ஆயுதமாகவும், சுங்க வரிகளை அழுத்தமாகவும், நிதி கட்டமைப்புகளை கட்டாயப்படுத்தும் கருவியாகவும், விநியோக சங்கிலிகளை பலவீனமாக்கும் முறையிலும் மாற்றி கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதற்கு பதிலடி அளித்த டிரம்ப், கார்னியை தாக்குமாறு தெரிவித்ததாவது,"என்ன நினைத்துக்கொண்டுள்ளார் என தெரியவில்லை. தயவு இல்லாமல் சீனாவை சார்ந்து இருக்க விரும்புகிறாரா, கவர்னர் கார்னி? சீனப்பொருட்களை கனடாவில் இறக்குமதி செய்தால், அது உங்கள் நாட்டை விழுங்கிவிடும்.
அதை மீறி சீனா உடன் உறவு வைத்தால், உங்கள் மீது 100 சதவீதம் வரிவிதிக்கப்படும்.”மேலும், டிரம்ப் முன்பு அமெரிக்காவின் அடுத்த கட்ட பாதுகாப்பு அமைப்பில் சேர கனடா மறுத்ததாகவும் குற்றச்சாட்டை முன்வைத்தார்.
English Summary
Trump warns Canada If you maintain relations China 100percentage tariff imposed