கால்வாயில் மீன்பிடிக்க சென்று பரிதாபமாக பலியான சிறுவன்.. பெற்றோர்களே மழைக்காலத்தில் பிள்ளைகளை பாருங்கள்.! 
                                    
                                    
                                   Chennai Kodungaiyur Child Death Canal when Fishing with Friends 
 
                                 
                               
                                
                                      
                                            சென்னையில் உள்ள கொடுங்கையூர் சின்னண்டிமடம் பகுதியில், திறந்த வெளி இராட்சத கழிவுநீர் கால்வாய் உள்ளது. இந்த கால்வாய் கடந்த சில நாட்களாக பெய்து வந்த மழை காரணமாக நிரம்பி காணப்பட்டுள்ளது. இதில், அப்பகுதியை சார்ந்த சிறுவர்கள் தூண்டில் போட்டு மீன் பிடித்து வருகின்றனர். 
இந்நிலையில், இதே பகுதியை சார்ந்த லோகேஷ் - கோமதி தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். லோகேஷ் இறந்துவிட்ட நிலையில், இவரது மூத்த மகன் முகேஷ் (வயது 9), அவரது பாட்டி வீட்டில் தங்கி பள்ளிக்கு சென்று வந்துள்ளார். 

நேற்று மதிய நேரத்தில் சிறுவர்களுடன் முகேஷ் மீன் பிடித்து விளையாடிக்கொண்டு இருக்கையில், எதிர்பாராத விதமாக கால்வாய்க்குள் விழுந்துள்ளார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த சக நண்பர்களால் அவரை காப்பாற்ற கூறி கூச்சலிட்டுள்ளனர். 
இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்துவிட்டு, தாமாக தேடும் பணியிலும் ஈடுபட்டனர். இதனையடுத்து கால்வாயில் அடித்து செல்லப்பட்ட சிறுவன், 300 அடி தூரத்தில் பிணமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த விஷயம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
                                     
                                 
                   
                       English Summary
                       Chennai Kodungaiyur Child Death Canal when Fishing with Friends