நடுக்கடலில் பிளாஸ்டிக் பெட்டியை பிடித்து 8 மணிநேரம் உயிருக்கு போராடிய தமிழக மீனவர்கள்.. பத்திரமாக மீட்கப்பட்டனர்.! - Seithipunal
Seithipunal


கோவளம் அருகே ஆழ்கடலில் பைபர் படகு மூலமாக மீன்பிடித்துக்கொண்டு இருந்த மீனவர்களின் படகு நீரில் மூழ்கி, 8 மணி நேரம் கடலில் உயிருக்கு போராடிய மீனவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். 

சென்னையில் உள்ள வண்ணாரப்பேட்டை பூண்டி தங்கம்மாள் தெரு பகுதியைச் சார்ந்த தேசம் என்பவருக்கு சொந்தமான படகில், காசிமேடு பகுதியைச் சேர்ந்த 5 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். 

இதன்போது, நள்ளிரவு நேரத்தில் கடல் சீற்றம் திடீரென அதிகரிக்கவே, எதிர்பாராதவிதமாக பைபர் படகு கடலில் மூழ்கியுள்ளது. கடலில் மூழ்கிய படகில் இருந்த ஐஸ் பெட்டி நீரில் மிதந்துகொண்டு இருந்துள்ளது. 

இதனையடுத்து, இரவு சுமார் 8 மணிநேரமாக ஐஸ் பெட்டியை பிடித்தவாறே மீனவர்கள் உயிரை கையில் பிடித்திருக்க, காலையில் கோவளம் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் செல்கையில் மீனவர்கள் நீரில் தத்தளிப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். 

உடனடியாக அவர்களை மீட்டு கரைக்கு கொண்டு வந்த மீனவர்கள், அவசர ஊர்தி மூலமாக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மீனவர்களை மீட்டு வந்த மீனவர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai Kanchipuram Fisherman Struggle Mid Sea 11 June 2021


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->