ஊரடங்கில் வயிறார உணவளித்த அம்மா உணவகத்தை சூறையாடிய திமுக உடான்ஸ்பிறப்புகள்.. தொடங்கியது ஆஜராக திமுகவின் ஆட்டம்.!
Chennai JJ Nagar Amma Unavagam Attacked by DMK Culprits 4 May 2021
சென்னையில் உள்ள ஜெ.ஜெ நகர் பகுதியில் அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது. இந்த அம்மா உணவகத்திற்குள் மு.க ஸ்டாலின் புகைப்படத்துடன் வந்த திமுகவினர், அங்குள்ள ஊழியர்கள் மீது கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், அங்கிருந்த அம்மா உணவக புகைப்படத்தை வெளியே எடுத்து கிழித்து கீழேபோட்ட நிலையில், அதனை காலால் எட்டி உதைத்து அடாவடி தகராறு செய்தனர். இந்த சம்பவத்தை விடியோவாகவும் பதிவு செய்துகொண்டு இருந்தனர்.

மேலும், அம்மா உணவகத்தில் பணியாற்றி வரும் பெண்களை அவதூறாக பேசிய நிலையில், இனி திமுகவினருக்கு மட்டுமே நீங்கள் வேலை பார்க்க வேண்டும் என்றும், திமுகவினர் மட்டுமே பணிகளில் ஈடுபட வேண்டும் என்றும், அதிமுகவினர் அம்மா உணவகத்தில் பணியாற்றினால் அவர்கள் வீட்டிற்கு செல்லுங்கள் என்றும் மிரட்டியுள்ளனர்.
ஊரடங்கு காலங்களில் ஏழை, எளிய மக்களுக்கு வயிறார உணவளித்த ஒரு உணவகமாக கூட பார்க்காமல், அடாவடித்தனம் செய்தது பெரும் அச்சத்தையே மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. இவர்களின் மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா? என்பதும் தற்போது பெரும் கேள்விக்குறிக்கு ஒன்றாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Chennai JJ Nagar Amma Unavagam Attacked by DMK Culprits 4 May 2021