உருவாக்கியது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் இங்கெல்லாம் கொட்டி தீர்க்க போகும் மழை.! 
                                    
                                    
                                   CHENNAI IMD REPORT FOR RAIN ALERT 
 
                                 
                               
                                
                                      
                                            மத்திய கிழக்கு வங்க கடல் மற்றும் மத்திய கிழக்கு அரபிக்கடலில் இன்று ஒரேநாளில் இரண்டு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவாகி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து இருந்தது.
இந்நிலையில், சற்றுமுன் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "மத்திய கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. 

இது மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு ஆந்திரா தெற்கு ஒடிசா கடற்கரையை நோக்கி நகரக்கூடும் . மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு அரபிக்கடல், லட்சத்தீவு பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது." என்று தகவல் தெரிவித்துள்ளது.
மேலும், சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அந்த அறிவிப்பில், "வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக இன்று திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யும்.

ஏனைய வட மாவட்டங்கள் மற்றும் திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், ஏனைய தென் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய கூடும். 
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்." என்று தெரிவித்துள்ளது.
                                     
                                 
                   
                       English Summary
                       CHENNAI IMD REPORT FOR RAIN ALERT