கடல் அரிப்பை தடுக்க கோரிய வழக்கு - மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு.! - Seithipunal
Seithipunal


சென்னை உயர்நீதிமன்றத்தில் மீனவர் நல சங்கம் சார்பில், மீனவர் தந்தை செல்வ ராஜ்குமார் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் அவர் தெரிவித்ததாவது, 'இந்தியாவில், 1,200 கிலோ மீட்டர் நீளமுடைய கடற்கரையில் கடல் அலை, கடல் உள்வாங்குவது, நீரோட்ட மாற்றம் காரணமாக கடல் அரிப்பு ஏற்படுகிறது. இதனால், மீனவ சமுதாயம் பெரியளவில்,பாதிக்கப்பட்டுள்ளது.  

தமிழ்நாட்டில் உள்ள சுமார் 50 கடற்கரை கிராமங்கள் கடல் அரிப்பால் பாதிக்கப்பட்டுள்ளது. இதை தடுப்பதற்கான திட்டத்தை அமல்படுத்தும்படி தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால் அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 

இதுகுறித்து பலமுறை மனு அளித்தும் இதுவரை அதற்காக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படாததால், தமிழ்நாட்டில் பழவேற்காடு முதல் கன்னியாகுமரி வரை கடல் அரிப்பை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

இந்த மனுவை விசாரணை செய்த பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி கிருஷ்ணகுமார் அடங்கிய அமர்வு, மத்திய - மாநில அரசுகள் நான்கு வாரங்களில் பதில் அளிக்கும்படி உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chennai high court order to central and state government for sea ​​erosion


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->