ஆகாஷ் பாஸ்கரன் தொடர்ந்த வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நீரில் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு!
chennai High Court Aakash Baskaran ED Raid case
டாஸ்மாக் முறைகேடு வழக்கில் சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரனுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை (ED) கடந்த மாதம் சோதனை நடத்தியது. அந்த சோதனையின் போது ஆகாஷ் பாஸ்கரனிடமிருந்து பல முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவில், சென்னை உயர்நீதிமன்றம், அமலாக்கத்துறை கைப்பற்றிய ஆவணங்களை ஆகாஷ் பாஸ்கரனுக்கு மீண்டும் ஒப்படைக்க உத்தரவிட்டது. மேலும், அவை தொடர்பாக ED மேலதிக நடவடிக்கை எடுக்கக் கூடாது என்றும் தடை விதித்தது.
ஆனால், அந்த தடை உத்தரவுகள் நடைமுறையில் இருக்கும் நிலையில் கூட, அமலாக்கத்துறை புதிய நோட்டீஸ் அனுப்பியதாக கூறி, ஆகாஷ் பாஸ்கரன் சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த அவமதிப்பு வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், அமலாக்கத்துறை உத்தரவுகளை மீறியதா என்பதை தெளிவுபடுத்தும் நோக்கில், அமலாக்கத்துறை மேல்முறையீட்டு ஆணைய தலைவர் மற்றும் பதிவாளர் இருவரும் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
வழக்கின் அடுத்த கட்ட விசாரணை விரைவில் நடைபெற உள்ளது. நீதிமன்றத்தின் இந்த உத்தரவு, டாஸ்மாக் முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை நடவடிக்கைகள் சட்டபூர்வமா என்ற கேள்வியை மீண்டும் முன்னிலைப்படுத்தியுள்ளது.
English Summary
chennai High Court Aakash Baskaran ED Raid case