நேரலை செய்ய போலீசாரின் அனுமதி தேவையில்லை - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு! - Seithipunal
Seithipunal


ராமர் கோவில் திறப்பை தனியார் கோவில், மண்டபங்களில் நேரலை செய்ய போலீசாரின் அனுமதி தேவையில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ராமர் கோவில் திறப்பை நேரலை செய்ய, பூஜைகள் செய்யவோ போலீசார் அனுமதி தேவையில்லை என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இன்று ராமர் கோவில் திறப்பை முன்னிட்டு சென்னை பட்டாபிராம் பகுதியில் அமைந்துள்ள தனியார் மண்டபத்தில் பஜனைகள், அன்னதானம் நடத்த காவல்துறை அனுமதி மறுத்ததாகவும், இந்த உத்தரவை றது செய்து மாது வழங்க வேண்டும் என்றும், சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடரப்பட்டது. 

இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்  தெரிவிக்கையில், "ராமர்கோவில் கும்பாபிஷேக நிகழ்வை தனியார் கோவில்கள், திருமண மண்டபங்களில் நேரலை ஒளிபரப்பு செய்யவோ, பூஜைகள் செய்யவோ காவல்துறையின் அனுமதி தேவையில்லை.

அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோவில்களில் நேரலை, பூஜை மேற்கொள்ள வேண்டுமென்றால் கோவில் செயல் அலுவலரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும். செயல் அலுவலர் உரிய கட்டுப்பாடுகளுடன் அனுமதியளிக்க வேண்டும். கூட்டம் அதிகரித்தால் அதனை கட்டுப்படுத்த காவல்துறை நடவடிக்கை மேற்கொள்ளலாம்" என்று நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai HC Order for Ayodhya Ramar live


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->