போலி சாதி சான்றிதழ் கொடுத்து அரசு பணி! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு! - Seithipunal
Seithipunal


"அரசு வேலைக்காக போலிச் சாதி சான்றிதழ் வழங்கி, பட்டியல் இனத்தவர்களுக்கு கிடைக்க வேண்டிய இட ஒதுக்கீட்டை கொள்ளையடிக்கும் நபர்களை தண்டிக்காமல் விட முடியாது" என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கோவை அவிநாசி பகுதியை சேர்ந்தவர் பாலசுந்தரம். இவர் பழங்குடியினத்தை சேர்ந்தவர என்று போலியான சாதி சான்றிதழ் கொடுத்து, 1982 ஆம் ஆண்டு கோவை வன மரபியல் நிறுவனத்தில் கலாசியாக பணியில் சேர்ந்துள்ளார்.

பின்னர் 1999 ஆம் ஆண்டு இளநிலை எழுத்தாளராக பதவி உயர்வு பெற்றார் பாலசுந்தரம். அப்போது அவரின் சாதி சான்றிதழ் ஆய்வு செய்யப்பட்டதில், அவரின் சகோதரியும், சகோதரனும் வேறு சாதியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து கடந்த 2022 ஆம் ஆண்டு பாலசுந்தரத்தின் சாதி சான்றிதழ் ரத்து செய்யப்பட்டது. இதனை அடுத்து பாலசுந்தரம், 40 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்ட என்னுடைய சாதி சான்றிதழை தற்போது ஆய்வு செய்து ரத்து செய்திருப்பது சட்டபூர்வமான நடவடிக்கை அல்ல என்று, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள், பன்முகத்தன்மை கொண்ட நம் நாட்டில் இட ஒதுக்கீடு கொள்கை பெருமைக்குரிய ஒன்று. அரசு வேலையை பெறுவதற்காக தங்களது சாதியை மறைத்து, பட்டியலின மக்களுக்கு கிடைக்க வேண்டிய இட ஒதுக்கீட்டை துஷ்பிரயோகம் செய்பவர்களை தண்டிக்காமல் விடக்கூடாது" என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

தொடர்ந்து பாலச்சுந்திரத்தின் சாதி சான்று ரத்து செய்த உத்தரவை உறுதி செய்த நீதிபதிகள், அவர் தாக்கல் செய்த வழக்கையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். 

மேலும் இந்த தீர்ப்பில் போலிச் சாதி சான்றிதழ் கண்டறியப்படுவதற்கு தாமதம் ஏற்பட்டதை காரணம் காட்டி, பட்டிலின மக்களுக்கு கிடைக்க வேண்டிய இட ஒதுக்கீட்டை துஷ்பிரயோகம் செய்ததை நியாயப்படுத்த முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். 


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai HC order fake community certificate case


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->